தேர்தல் பரப்புரைக்கு லீவு! விஜய் பொம்மையுடன் வந்த வேட்பாளர்கள்! இட்ஸ் வெரி ராங் ப்ரோ!
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பரப்புரையை தொடர்ந்து ரத்து செய்து வருகிறார். மறுபுறம் தேர்தல் நெருங்குவதால், விஜய் பொம்மையுடன் தவெக வேட்பாளர்கள் பிரச்சார களத்தில் இறங்கியிருக்கின்றனர்.
வழக்கமாக, மறைந்த தலைவர்களின் உருவ பொம்மையைதான் பலரும் பயன்படுத்துவார்கள். ஆனால், உயிருடன் இருக்கும் தலைவரின் பொம்மையை, பிரச்சாரத்திற்காக ஒரு கட்சியினர் பயன்படுத்துவது இதுவே முதல்முறை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

விஜய் vs தேர்தல் பரப்புரை
தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில், கட்சியின் தலைவர் விஜய், தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், விஜய் இதுவரை பெரிய அளவில் பரப்புரைக்கு செல்லவில்லை. ஒரு சில இடங்களில் பரப்புரைக்கு சென்றாலும் அங்கு, போக்குவரத்து நெரிசல், ரசிகர்கள் நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுவது போன்ற பிரச்சனை உருவாகிவிடுகின்றன. எனவே விஜய் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார்.
தொடர் ரத்து
நேற்று முன்தினம் வில்லிவாக்கம் மற்றும் தி.நகரில் விஜய் பரப்புரை மேற்கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது. பரப்புரைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகிகள் அதிரடியாக செய்ய தொடங்கினர். ஆனால், கொஞ்ச நேரத்திலேயே விஜய் தனது பரப்புரையை ரத்து செய்துவிட்டார் என்று அறிவிப்பு வெளியானது.
காரணங்கள் என்ன?
காரணம் வில்லிவாக்கத்திலிருந்து தி.நகருக்கு 1 மணி நேரத்தில் போக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டிருந்ததாகவும், அது சாத்தியமாகாது என்பதால் விஜய் பரப்புரையை ரத்து செய்தார் என்றும் சொல்லப்பட்டது.
அதேபோல நேற்று சைதாப்பேட்டையில் மேற்கொள்ள இருந்த பரப்பரையும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பரப்புரையை ஒரு மணி நேரத்தில் முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதியளித்திருந்ததாகவும், இதை ஏற்காததால் பரப்புரை ரத்து செய்யப்படுவதாகவும் சொல்லப்பட்டது.
விஜய் பொம்மை
இப்படி தொடர்ந்து ஒவ்வொரு பரப்புரையும் ரத்து செய்யப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர்கள் அப்செட் ஆகியிருக்கின்றனர். எனவே வேறு வழியின்றி விஜய்யை போன்ற உருவம் கொண்ட பொம்மையை வேனில் ஏற்றி, ஓட்டு கேட்டு வருகின்றனர். திருச்சியில் தவெக நிர்வாகிகள், விஜய் பொம்மையை காரில் ஏற்றி நிற்க வைத்து ஓட்டு கேட்டு வரும் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
நேத்து மீட்டிங்ல தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே! செங்கோட்டையன் கட்டிப்பிடித்து சொன்னது யாரை பாருங்க -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட்












Click it and Unblock the Notifications