கரூர் வரும் முதல்வர்.. பொதுமக்கள் விஜய்யை பார்க்க 4 இடங்களில் ஏற்பாடு செய்த காவல்துறை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கரூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வரும் முதல்வர் விஜய்யை பார்க்க போலீசார் 4 இடங்களில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் திருச்சி விமான நிலையம் எதிர்ப்புறம், ஐஜி அலுவலகம் அருகில் உள்ள இடம், சஞ்சீவி நகர், சிந்தாமணி அண்ணாமலை ஆகிய 4 இடங்களில் பொதுமக்கள் விஜய்யை காண போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் முதல்வர் விஜய் இன்று கரூர் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து காலை 9 மணிக்கு விமானம் வாயிலாக புறப்படும் விஜய், திருச்சி விமான நிலையம் வருகிறார். இதன்பின் திருச்சியில் இருந்து கார் மூலமாக கரூர் செல்லும் விஜய், ரோடு ஷோ சென்று பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Vijay TVK Karur Stampede

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் விஜய்க்கு வழியெங்கும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே முதல்வர் விஜய்யை பார்க்க அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் திருச்சி விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க ஏராளமானோர் கூடி மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் முதல்வர் விஜய்யை பார்க்க மக்கள் வரக்கூடும் என்று கணித்து காவல்துறை தரப்பில் 4 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக போக்குவரத்து நெரிசலையும், பல்வேறு அசம்பாவிதங்களையும் தடுக்க முடியும். முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை சாலை, சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவி நகர், குடமுருட்டி பாலம் மற்றும் கரூர் சாலை உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வர் விஜய்யை பொதுமக்கள் பார்க்க திருச்சி விமான நிலையம் எதிர்ப்புறம், ஐஜி அலுவலகம் அருகில் உள்ள இடம், சஞ்சீவி நகர், சிந்தாமணி அண்ணாமலை ஆகிய 4 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 4 இடங்களிலும் பொதுமக்கள் நின்று விஜய்யை பார்க்கலாம். இந்தப் பகுதிகளில் இரும்பு தடுப்புகளை அமைத்திருப்பதால், போக்குவரத்து நெரிசலையும் தடுக்க முடியும். ஏற்கனவே விஜய் திருச்சி கிழக்கு தொகுதிக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளார். இதனால் திருச்சி மாவட்ட தவெக நிர்வாகிகள் அதிகளவில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+