விஜய் வீடு பக்கத்தில்.. அதுக்கு தான் தலைமைச் செயலகத்தை அங்கு கட்டுகிறாரா? டிடிவி தினகரன் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: புதிய தலைமைச் செயலகத்தை முதல்வர் விஜய்யின் வீடு அருகே அமைக்க திட்டம் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலான இடத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவு ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ள டிடிவி தினகரன், திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நிஜத்தில் வில்லனாகவும் விஜய் இருப்பதாக சாடியுள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 25 ஏக்கரில் 20 லட்சம் சதுர அடியில் 15 மாடிகள் கொண்ட தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது. கட்டட வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக மட்டும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

TTV Dhinakaran Vijay Secretariat

இதற்காக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 5 நாட்களிலேயே தலைமைச் செயலகம் தொடர்பான இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் இருக்கும் முதல்வர் விஜய்யின் வீட்டிற்கு வெறும் 50 மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது.

கடலுக்கு அருகில் அமைவதால், விஜய்யின் ஜாதகப்படி இந்த தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய்க்கு மக்கள் 108 தொகுதிகளில் தான் ஆதரவு அளித்தார்கள். அவருக்கு பெரும்பான்மை இடங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் ஆதரவில் தான் தவெக ஆட்சி நடக்கிறது. தவெகவுக்கு ஆதரவு அளித்ததற்காக இந்த கட்சிகள் நிச்சயமாக வருத்தப்பட போகிறார்கள். விஜய் எவ்வளவு தரம்தாழ்ந்து பேசுகிறார்.. அவரின் தரம் அதுதான்.. உடல்மொழி, வார்த்தை பிரயோகத்தை பாருங்கள்.. மிசா நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட தவறான நடவடிக்கை.

ஸ்டாலின் உட்பட பலரும் சிறைக்கு சென்றார்கள். அவர்களை சிறைத்துறை மோசமாக தாக்கினார்கள். விஜய் சினிமாவில் தான் ஹீரோ.. நிஜ வாழ்க்கையில் அவர் வில்லன்.. சுயநலமிக்கவர்.. தனது நலத்திற்காக யாரையும் பலி கொடுப்பார். ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்றே தெரியாமல் தான் விஜய் இருக்கிறார். தொலைநோக்கு திட்டம் என்று எதுவும் இல்லை.

அதேபோல் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்துள்ளார்கள். சாந்தோம் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதி. அங்கு சென்று தலைமைச் செயலகம் அமைக்க நினைக்கிறார்கள். எதிர்காலத்தில் அந்த பகுதியை முன்னேற்றம் செய்ய முடியாது. அவரின் வீடு அருகில் இருப்பதால் தலைமைச் செயலகத்தை அங்கு கட்டுகிறாரா? துக்ளக் ஸ்டைலில் இந்த ஆட்சி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+