திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா?
திருச்சி: சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் தவெக தரப்பில் தேர்தல் அலுவலகம், பூத் கமிட்டி, பிரச்சாரக் குழு என்று பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள விஜய், திருச்சி கிழக்கு பூத் கமிட்டியை மட்டுமே அமைத்திருக்கிறார்.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவது தொடர்பாக பேசப்பட்டு கொண்டே இருந்தது. அதற்கேற்ப புஸ்ஸி ஆனந்த் தரப்பில் பெரம்பூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் அமைத்து பணியாற்றி வந்தார்.

அதேபோல் விஜய்யின் முதல் தேர்தல் பிரச்சாரமே பெரம்பூர் தொகுதியில் தான் செய்யப்பட இருந்தது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது தொடர்பாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், அங்கு தவெக தரப்பில் பெரிய ஆர்வம் காட்டப்படவில்லை. ஆனால் மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்துதான் தொடங்கினார்.
ஆனால் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்னும் தவெக சார்பாக தேர்தல் அலுவலகம் கூட திறக்கப்படவில்லை. பூத் கமிட்டியை மட்டும் முறையாக அமைத்துள்ள விஜய், மற்றபடி எந்த பணிகளையும் செய்யவில்லை. அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் பெரியளவில் தவெக பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் விஜய்யின் முடிவுக்கு பின் பல்வேறு கணக்குகள் இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியை தேர்வு செய்ததற்கு கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் சரிபாதி இருப்பதும் ஒரு காரணமாகும். அதேபோல் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் இளம் வாக்காளர்கள் அதிமுகமாக இருக்கின்றனர். அதேபோல் கடந்த முறை இந்த இரு தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம், அமமுக மற்றும் நாதக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
ஆனால் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத சூழலில், விஜய்யால் திருச்சி கிழக்கு தொகுதியில் இறங்கி பணியாற்ற முடியுமா என்பதும் சந்தேகம் தான். தமிழ்நாடு முழுவதும் விஜய்யை மட்டுமே நம்பி தவெகவின் பிரச்சாரம் இருப்பதால், அவரால் இந்த இரு தொகுதிகளிலுமே அதிக நேரம் பணியாற்ற முடியாது என்று பார்க்கப்படுகிறது.
-
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
விஜய் அரசை தாண்டி.. பரந்தூர் விமான நிலையத்துக்கு புதிய சிக்கல்.. ஆந்திரா மூலம் வந்த புது பிரச்சனை! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications