கேப்டனை சீண்டினால்.. பார்த்தீங்களா பாத்தீங்களா.. துரைமுருகனை விடாமல் சீண்டி வரும் தேமுதிக
பிரச்சாரத்தின்போது துரைமுருகனை விஜயபிரபாகரன் கடுமையாக தாக்கி பேசினார்.
Recommended Video

திருச்சி: "கேப்டனை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம்னு சொன்னோம்.. சீண்டினால், சேதாரம் உங்களுக்குத்தான் என்றும் அப்ப இருந்தே சொல்றோம். ஆனா தேவையில்லாமல் துரைமுருகன் கேப்டனை சீண்டி.. இப்போது வசமாக சிக்கிக்கொண்டார்" என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
செய்த சாதனைகளையும், செய்ய போற சாதனைகளையும் பற்றி பிரச்சாரம் செய்யாமல் தேமுதிக தனி தினுசாக பிரச்சாரம் செய்து வருகிறது.
துரைமுருகன் வீட்டில் செய்த ரெய்டு பற்றிதான் அம்மாவும்-பிள்ளையும் பிரச்சாரம் செய்து கொண்டு வருகிறார்கள். அதுவும் இந்த விஷயத்தில் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாமல், உடம்பு சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்த்துடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்!

பிரச்சாரம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியபோது "விஜயகாந்தை பற்றி உங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். கட்சியை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.

கேப்டனை சீண்டினால்?
கேப்டனை தேவையில்லாமல் சீண்ட வேண்டாம்னு சொன்னோம்.. சீண்டினால், சேதாரம் உங்களுக்குத்தான் என்றும் அப்ப இருந்தே சொல்றோம். ஆனால் தேவையில்லாமல் துரைமுருகன் கேப்டனை சீண்டி இப்போது வசமாக சிக்கிக்கொண்டார். திமுகவை சேர்ந்த எத்தனை பேர் உங்கள் நிலத்தை அபகரித்து இருந்தார்கள்? துரைமுருகன் வீட்டில் மூட்டைகளில் கத்தை, கத்தையாக பணம் எடுத்து இருக்கிறார்கள்.

மோடி அலை
கடந்த முறை தமிழ்நாட்டில் மோடி அலை வீசவில்லை. ஆனால் இந்த முறை தமிழகத்தில் கண்டிப்பாக மோடி அலை வீசும். பாஜக அபார வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீதமுள்ள 2 ஆண்டுகளும் தொடர வேண்டும்.

மெகா கூட்டணி
இது ஒரு மெகா கூட்டணி. தெய்வத்தாலும் மக்களாலும் உருவான கூட்டணி. இந்த கூட்டணியை யார் அழிக்க நினைக்கிறார்களோ அவர்கள் முட்டாள்கள். கூட்டணியை ஆதரிக்க நினைப்பவர்கள் தான் புத்திசாலிகள். போட்டி, பொறாமை, போலி கவுரவம் இது எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு எதிர்காலத்தை நினைத்து சிந்தித்து அனைவரும் செயல்படுங்கள்" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications