விஷாலுக்கு விண்ணப்பம் கூட எப்படி எழுதுவது என தெரியாது... எஸ்.வி.சேகர் தாக்கு
திருச்சி: வாய் ஜாலத்தால் நடிகர் விஷால் ஏமாற்றி வருவதாகவும், அவருக்கு விண்ணப்பம் கூட எப்படி எழுதுவது என தெரியவில்லை என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் மே 14ஆம் தேதி கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தாலும், சங்கத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், வாய் ஜாலத்தால் நடிகர் விஷால் ஏமாற்றி வருவதாகவும், அவருக்கு விண்ணப்பம் கூட எப்படி எழுதுவது என தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.
நடிகர் சங்கத்திற்கு ராதிகா, டி.ராஜேந்தர் அல்லது தனது தலைமையிலோ சிறந்த குழு விரைவில் தலைமை ஏற்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, முறைகேடு புகாரைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக குழுவுக்கு, தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications