"திரிசங்கு" நிலை.. மகனுக்கு சீட் உறுதி.. வைத்திலிங்கம் திமுகவுக்கு தாவிய பின்னணி இதுதானா?
திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளருமான தஞ்சையைச் சேர்ந்த வைத்திலிங்கம், இன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ்ஸுக்கு தோள் கொடுத்து வந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் வைத்திலிங்கம் இன்று ராஜினாமா செய்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், இந்த நிகழ்வு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி தயார் செய்தல், பொதுக்கூட்டம், பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து தங்கள் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை கட்சியில் இணைப்பதும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்துள்ளா. ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்திலிங்கம் இன்று காலை தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கையோடு இன்றே திமுகவில் இணைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துடன் சேர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு அவருக்கு ஆதரவாக இருந்தவர்களில் வைத்திலிங்கம் மிக முக்கியமானவர். மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து, வைத்திலிங்கம் விஜய் தலைமையிலான தவெகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. அதனை வைத்திலிங்கம் மறுத்து வந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் அண்மையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். பாஜக மூலமாவது எப்படியாவது அதிமுக கூட்டணியில் இணைந்துவிடலாம் என ஓபிஎஸ் தீவிரம் காட்டி வந்தார்.
பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள, தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மேடையேற்றப்பட உள்ளனர். இந்தப் பொதுக்கூட்டத்துக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு இல்லை.
இதனால், இனியும் இங்கு இருந்தால் அரசியலில் எதிர்காலமே இருக்காது என்பதை உணர்ந்தே, வைத்திலிங்கம் திமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், ஜெயலலிதாவின் தளபதிகளில் ஒருவராக அதிமுகவில் வலம் வந்தார். அதிமுகவின் டெல்டா மண்டல தளபதியாக விளங்கியவர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, 2001- 2006 காலகட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும், 2011-2016 காலகட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2016 தேர்தலில் தோல்வியுற்ற பிறகு, ராஜ்யசபாயா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு 2021ல் மீண்டும் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
வைத்திலிங்கம் திமுகவுக்கு தாவ முடிவெடுத்தது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. வைத்திலிங்கத்தை தவெகவுக்கு கொண்டு வருவதற்கும் பல்வேறு கட்டங்களாக முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. எனினும், வைத்திலிங்கம் விஜய் கட்சிக்கு போக விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேசமயம், திமுக தரப்பில் இருந்தும் வைத்திலிங்கத்திடம் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளனர். ஆனால், அப்போதெல்லாம் அந்த ஆஃபர்களை ஏற்காத வைத்திலிங்கம் இப்போது ஓபிஎஸ் அரசியல் செயல்பாடுகளுக்கு எதிர்காலம் இல்லை எனக் கருதியே இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவிலும் இல்லாமல், ஓபிஎஸ் பக்கம் இருந்தால் அரசியல் எதிர்காலமும் இல்லாமல், இரண்டுக்கும் இடையில் மாட்டி திண்டாடி நிற்கும் திரிசங்கு நிலையில் தான் வைத்திலிங்கம் திமுகவுக்கு போகும் முடிவை எடுத்தாராம்.
மேலும், வரும் சட்டசபை தேர்தலில் வைத்திலிங்கம் மகனுக்கு ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் சீட் தருவதாகவும் திமுக தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் யோசித்தே வைத்திலிங்கம், தற்போது தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு டைவ் அடித்துள்ளார்.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்?












Click it and Unblock the Notifications