கொள்ளிடம் ஆற்றங்கரை.. கொலுசு.. செருப்பு.. புடவை.. புதர் அருகில் எலும்புக்கூடு.. யார் அந்த பெண்?
கொள்ளிடம் ஆற்றங்கரையில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது
திருச்சி: கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள புதர் அருகில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.
திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி என்ற கிராமம் உள்ளது... இங்குள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் நாணல் புதரில் ஒரு எலும்புக்கூடு வெளியே நீட்டிக் கொண்டு காணப்பட்டது.

இதை பார்த்து அலறிய மக்கள், திருச்செனம்பூண்டி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் சொல்ல, அவரோ தோகூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் தடயவியல் நிபுணர்கள் உட்பட பலரும் புதர் பகுதிக்கு வந்தனர்.
அவர்களுடன் தடய அறிவியல் நிபுணர்களும் வந்து அந்த அடையாளம் தெரியாத எலும்புக்கூடை ஆய்வு செய்தனர். அந்த எலும்புக்கூடு பெண்ணுடையது என்றும் 30 முதல் 40 வயது வரை உள்ள பெண்ணாக அவர் இருக்கலாம் என்றும் யூகிக்கப்பட்டுள்ளது. மேலும் எலும்புக்கூடு இருந்த புதர் பகுதியில் அந்த இடத்தில் ஒரு கொலுசு கிடந்தது.. பெண்கள் அணியும் செருப்பு, புடவையின் ஒரு பகுதியும் கிடந்தது.
எலும்புக்கூடாக கிடைத்துள்ளதால், அந்த பெண் இறந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்கிறார்கள்.. ஆனால், அவர் யார்? எப்படி இறந்தார் என தெரியவில்லை.. தோகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றங்கரை புதரில் பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்!












Click it and Unblock the Notifications