பரபர வீடியோ.. 15 வயசு சிறுமியுடன் காதல்.. கல்யாணம் ஆன மணிகண்டனை துரத்தி துரத்தி தாக்கிய அண்ணன்கள்
15 வயது சிறுமியை காதலித்த இளைஞருக்கு சரமாரி அடி விழுந்துள்ளது
திருச்சி: 15 வயசு சிறுமியை காதலித்து ஏமாற்ற முயன்ற, கல்யாணம் ஆன இளைஞரை, அச்சிறுமியின் அண்ணன்கள் நடுத்தெருவில் அரிவாளை கொண்டு ஓட ஓட விரட்டி உள்ளனர்.
திருச்சி திம்மராய சமுத்திரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஒரு கொத்தனார். 30 வயதான மணிகண்டனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் இவரது மனைவி வேறு ஒருத்தருடன் சென்றுவிட்டாராம்.
இந்த சமயத்தில், மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை விரட்டி விரட்டி காதலித்து உள்ளார். அந்த சிறுமி 10-வது படிக்கிறாள்.

சிறுமி
சிறுமியை மணிகண்டன் காதலிக்கும் விஷயம் அவளது அண்ணன்களான சிவா, சுரேஷ், சந்தோஷ் ஆகியோருக்கு தெரிந்து விட்டது. இதனால் மணிகண்டனை கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனாலும் மணிகண்டன் அதை கேட்காமல் தினமும் சிறுமியை தனியாக கூப்பிட்டு சென்று பேசி வந்துள்ளார்.

வெளுத்தனர்
இப்படித்தான் போன, புதன்கிழமை சாயங்காலம் அந்த பகுதியில் இருந்த கோயில் பக்கம் தங்கையுடன் மணிகண்டன் பேசுவதை பார்த்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன்கள், நண்பர்கள் உதவியுடன் அரிவாள், இரும்பு கம்பியை எடுத்து கொண்டு போய் சரமாரியாக வெளுத்தனர்.

ஆயுதங்கள்
அவர்களின் பிடியில் இருந்து மணிகண்டன் தப்பி ஓட முயன்றாலும், தெருவெல்லாம் விரட்டி விரட்டி வந்து தாக்கினார்கள். அப்படியும் மணிகண்டன் ஒரு அடகு கடைக்குள் நுழைய முயன்றார்.. ஆனால் அவரை வெளியே இழுத்து போட்டு சரமாரியாக ஆயுதங்களால் தாக்கினார்கள்.

சிசிடிவி காட்சிகள்
இதை அதிர்ச்சியுடன் பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றனர். தகவலறிந்த போலீசார் மணிகண்டனை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மணிகண்டனை தாக்கும் காட்சிகள் அனைத்துமே சிசிடிவி கேமிராவில் பதிவாகி, அந்த வீடியோவும் தற்போது வெளியாகி தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications