ஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங்.. ஸ்டாலின் மீது விந்தியா தாக்கு!
ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விந்தியா பிரச்சாரம் செய்தார்.
ஓட்டப்பிடாரம்: தேர்தல் சமயத்துல மட்டும் திமுக மதவெறி இல்லாத கட்சி ஆயிடும். ஸ்டாலின் கிராமத்துக்கு போய் சபை நடத்துவார். அப்புறம் ஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங்!
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது, திமுக, அமமுகவை கடுமையாக சாடினார். அப்போது பேசியபோது:

தேர்தல் சமயத்தில் பொள்ளாச்சி பிரச்னை குறித்துபேசி, பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். தேர்தல் வந்தால் மட்டும் திமுக மதவெறி இல்லாத கட்சியாக மாறிவிடுகிறது. பெண்கள்மீது அக்கறை வந்துவிடுகிறது.
ஸ்டாலின், கிராமங்களுக்குச் சென்று சபை நடத்துகிறார். டீக்கடைக்கு போய் டீ குடிப்பார். அப்புறம் ஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங்! நல்லா டிராமா போடறார். இதெல்லாம் 23-ம் தேதி வரைக்கும்தான்! மக்களோட சொத்தை சுருட்டிக்கிட்டு, கப்பல் வாங்கி விட்டு ஓட்டிட்டு இருக்கிறார் டிஆர் பாலு!
சக்திமானை நம்பி மாடியில் இருந்து குதிப்பது என்பதும், ராகுல் காந்தி பிரதமராக இருந்து இந்தியாவை காப்பார் என்று நினைப்பதும் ஒன்னுதான்.
ஊழல் குறித்து பேச அதிமுகவுக்கு அருகதை இல்லை என ஸ்டாலின் சொல்றார். நாம் ஏன் பேச வேண்டும், ஊழலின் மொத்த உருவமே திமுகதானே? நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து வரலாறு படைத்ததே திமுகதான்" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications