திரிஷா உங்களுக்கு தங்கச்சியா? இல்லை துணைவியா? ஏதாவது ஒன்னு சொல்லுங்க விஜய்! அதிமுக மாஜி அட்டாக்!
தூத்துக்குடி: தன்னுடைய பலம் தெரியாமல் தன்னையே அழித்துக் கொண்டு விஜய்க்கு வால்பிடித்து கொண்டிருக்கிறார் அஜித் எனவும், முதல்வர் விஜய்க்கு திரிஷா உடன் பிறவா சகோதரியா? இல்லை துணைவியா? எதையாவது ஒன்றை சொல்லுங்கள். எதற்காக தமிழகத்தை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்," தவெக ஆட்சியைப் பிடிக்கவில்லை. இது மைனாரிட்டி அரசுதான். 108 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று ஒவ்வொரு தலைவர் வீட்டிற்காக சென்று என்னை காப்பாத்து காப்பாத்து என்று கூறி பிச்சை எடுத்து தான் அரசு நடத்திக் கொண்டிருக்கிறார்.
எஸ்.பி.சண்முகநாதன்
மந்திரி பதவி கொடுத்ததும் திமுகவில் இருந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் த.வெ.கவில் போய் சேர்ந்து விட்டன. அதிமுகவிலிருந்து 25 துரோகிகள் முதலில் ஆதரவு தெரிவித்து விட்டனர். அந்த துரோகிகளில் 20 பேர் அதிமுகவிற்கு திரும்ப வந்துவிட்டனர். சிவி சண்முகத்தை சந்தித்து முதல்வர் விஜய் ஆதரவு கேட்டார், இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் காலில் விழுந்து கூப்பிட்டீர்கள். கடந்த காலங்களை மறந்து விட்டு, என்ன நடந்தது என்று தெரியாமல் தமிழக முதல்வர் பேசுகிறார்.
விஜய்
லண்டனுக்கு சென்று தொழில் ஈர்ப்பில் ரூ.15000 கோடியில் முதலீடு வந்ததாக கூறுகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் தமிழகத்தில் தொழில் செய்து கொண்டிருப்பவர்களை, லண்டனுக்கு வரவேற்பு தமிழக முதல்வர் அங்கே வைத்து தொழில் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார். இங்கே உள்ள தலைமைச் செயலகத்தில் கையெழுத்து போட்டு விடலாம். அரசு பணத்தை வீணடித்துள்ளனர். இதற்கு 50 கோடி ரூபாய் வரை செலவாகி உள்ளதாக கூறுகின்றனர்.
கீர்த்தி சுரேஷ்
உலகத்தில் காஸ்ட்லியான ஹோட்டலில் முதல்வர் விஜய், டிரைவர் மற்றும் அவரது கூட்டாளிகள், நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் என எல்லோரும் எங்க போய் சேருகிறார்கள். அரசு பணத்தில் இன்பச் சுற்றுலா மாதிரி நடத்தியுள்ளனர். நடிகர் அஜித் அழைக்காமலே கார் பந்தயத்திற்கு சென்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதற்கு முன்பு நடந்த கார் பந்தயங்களில் இரண்டு முதல் ஐந்து இடங்களுக்குள் அஜித் வருவார். ஆனால் முதல்வர் விஜய் தொடங்கி வைத்த பந்தயத்தில் 38வது இடத்திற்கு அஜித் போய் உள்ளார். அவரது ரசிகர்கள் கேவலமாக காரி துப்பக்கூடிய நிலை உள்ளது.
நடிகர் அஜித்
விஜய்க்கு மேல் செல்வாக்கு உள்ள நடிகர் அஜித். தன்னுடைய பலம் தெரியாமல் தன்னையே அழித்துக் கொண்டு விஜய்க்கு வால்பிடித்து கொண்டிருக்கிறார் அஜித். இனி அவருடைய படமும் சோலி முடிஞ்சு போய்விடும். வாழ்க்கையும் முடிஞ்சு போய்விடும். அவர் திருந்தி ஒழுங்காக படம் நடித்து வந்தால் தான் தமிழகத்தில் அமர்ந்து ஒரு பெயர் இருக்கும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முதல்வரான பிறகு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் வெளியானது. இருந்தபோதிலும் அமைச்சர்களை அங்க போக சொல்லவில்லை.
திரிஷா
முதல்வர் விஜய பொறுத்தவரை அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். சாவு வீட்டுக்கு சென்றாலும், கல்யாண வீட்டுக்கு சென்றாலும், லண்டனுக்கு சென்றாலும் திரிஷாவை கூட்டிக் கொண்டு போகிறார். என்ன உறவின் அடிப்படையில் முதல்வர் அவரை கூட்டி செல்கின்றார்? என்ன உறவுடன் அவர் அவருடன் இருக்கிறார்.
துணைவியா?
திரிஷா உடன் பிறவா சகோதரி என்று சொல்லுங்கள், இல்லை முன்னாள் முதல்வர் கருணாநிதி மனைவி துணைவி என்று கூறியது போல எதையாவது ஒன்றை சொல்லுங்கள். எதற்காக தமிழகத்தை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். விஜய்க்கு 53 வயது திரிஷாவுக்கு 43 வயது, விஜயின் மகனுக்கு 20 வயதை தாண்டி விட்டது. விஜயின் மகளுக்கு 20 வயது தாண்டி விட்டது. இந்த நேரத்தில் ஒரு தகப்பன் செய்ய வேண்டிய கடமை என்ன? கிராமத்தில் இது போன்று இருந்தால் என்ன சொல்வோம்." என்றார்.


Click it and Unblock the Notifications
