சாதிக்கும் சிறுவன்.. ஸ்கேட்டிங் செய்துகொண்டே சிலம்பம் சுற்றி சாதனை.. 11 வயதில் மீண்டும் சாம்பியன்..!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் 11 வயது சிறுவனான அதிஸ்ராம், சாம்பின் பட்டத்தை வென்றுள்ள நிலையில் , சிறு வயதில் இருந்தே அவர் சிலம்பத்தில் உலக அளவில் சாதித்து வருகிறார்.
Silambam South India சார்பில் திருச்செந்தூரில் 12.3.22 அன்று நேஷனல் சிலம்பம் சாம்பியன்ஷிப் 2022 , டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலம்பம் கோப்பை 2022 போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், இப்போட்டியில் மதுரையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஜெ.அதீஸ் ராம் தனித்திறன் பிரிவில் முதல் பரிசை வென்றுள்ளார்

சிறுவன் அதீஸ் ராம்
அதீஸ் ராம் ஏற்கனவே மாநில, தேசிய, சர்வதேச சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார். இவர் மதுரை ஸ்ரீமாருதி சிலம்பம் பள்ளியில் பயின்று வரும் நிலையில், மகாகுரு திரு. ராமகிருஷ்ணன் ஆறு தலைமுறைகளாக இக்கலையை பயிற்றுவித்து வருகிறார். இவரது திறனை பாராட்டி சிலம்பத்தில் பல உலக சாதனைகள் மற்றும் பல வெற்றிகள் பெற்றதற்கான உலகளாவிய குழந்தை சாதனையாளர் விருதை (Global Kids Achievers Award-2021) பத்மஸ்ரீ டாக்டர்.விஜயகுமார் ஷா வழங்கினார்.

சிறு வயதிலேயே சாதனை
இவர் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றமைக்காக 72வது குடியரசு தினவிழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அன்பழகன் அவர்கள் விருது வழங்கி பாராட்டினார். ஸ்கேட்டிங் ஓட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது இவரது தனிச் சிறப்பு. கூடுதலாக வில் வித்தையிலும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல விருதுகள்
அதீஸ்ராமின் திறமையை பாராட்டி பல்வேறு அமைப்புகளும் பாராட்டுச் சான்று மற்றும் விருதுகள் வழங்கியுள்ளன. மதுரை ஸ்டார் மகாலில் நடைபெற்ற மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் நான்காம் ஆண்டு முப்பெரும் விழாவில் ஜெ. அதீஸ்ராம் சிலம்பத்தில் சாதனைகள் புரிந்து வருவதை பாராட்டி கலைச்செல்வர் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு திருச்சி மாவட்டம் முக்கொம்பில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஜெ. அதீஸ் ராமை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பாராட்டி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

குறும்படத்தில் நாயகன்
மேலும் 2020 ஆண்டிற்கான International Sports Star Award விருது, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற World Silambam Championship 2019 போட்டியில் இரட்டைக் கம்பு வீச்சு பிரிவில் முதல் பரிசு, 2018ல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு என பல போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறார். தற்போது சிலம்பாட்டம் குறித்து எடுக்கப்படும் "சிலம்பன்" எனும் குறும்படத்தில் குழந்தை நட்சத்திர நாயகனாக நடித்து வருகிறார் அதிஸ் ராம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications