வன்னியர்கள் இன்னமும் குடிசையில் தான் இருக்காங்க.. ரோடு வேலை பார்க்குறாங்க! அன்புமணி ராமதாஸ் வேதனை..!

Subscribe to Oneindia Tamil

தூத்துகுடி: அரசுப் பணிகளில் வன்னியர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற உண்மையான விவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனவும், வன்னியர் சமுதாயம் இன்னும் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ள நிலையில் கோழைத்தனமாக யாரோ ஆர்டிஐயில் கேட்டு பெற்றது போல போலியான தகவல்களை வெளியிடக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக சில தகவல்களை பெற்றிருக்கிறார். அதில் பாமக வலியுறுத்தி வரும் 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடை விட அதிகமாக வன்னியர் சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிரதிநித்துவத்தை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

pmk anbumani ramadoss reservation

இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அவர்கள் கேட்பதைவிட அச்சமூகத்தினர் அதிகமாக பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் வன்னியர் சமுதாயம் இன்னும் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ள நிலையில் கோழைத்தனமாக யாரோ ஆர்டிஐயில் கேட்டு பெற்றது போல போலியான தகவல்களை வெளியிடக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," அரசு பணிகளில் வன்னியர்கள் 10.5 சதவீதத்திற்கும் மேல் இடம்பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் போலியான தரவுகள் தயாரிக்கப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது கோழைத்தனமான செயல். ஒரு அரசியல் கட்சி இவ்வாறு செய்யலாம் ஆனால் தமிழக முதலமைச்சர், தமிழக அரசு இவ்வாறு செய்யலாமா? தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள தரவுகள் குரூப் சி மற்றும் குரூப் டி பணியிடங்களுக்கான தரவுகள் தான் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி யில் குரூப்-1 மற்றும் குரூப் 2 பணியிடங்களில் வன்னியர்கள் எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற உண்மையை நிலையை தமிழக அரசு வெளியிடுமா? MBC பிரிவில் 115 சாதிகள் உள்ளன தமிழ்நாட்டில் அதிக அளவில் குடிசையில் வசிக்கும் மக்கள் வன்னியர்கள் அவற்றில் 114 சாதிகள் இருப்பது 6.7 சதவீதம் மீதம் சுமார் 14% வன்னியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை.

இதனால் வன்னியர் சமுதாயம் இன்னும் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் வன்னியர் சமுதாயம் இன்னும் அதிக அளவில் குடிசையில் தான் உள்ளது. சாலை போடும் பணியை செய்பவர்களாக வன்னியர்கள் இருக்கிறார்கள். இது வன்னியர்களின் பிரச்சனை கிடையாது சமூகநீதி பிரச்சனை தமிழ்நாட்டின் வளர்ச்சி பிரச்சனை என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வன்னியர்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அதற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அடுத்த நிமிடமே தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைந்து விடும் .
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை திடீரென்று அறிவிக்காமல் போதுமான கால இடைவெளி கொடுத்து முறையாக அறிவிப்பை வெளியிட வேண்டும்." என அறிவுறுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+