கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: தவெக ஆட்சிக்கு வந்து 3 வாரங்களாகிவிட்டன. மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வரவேற்பு பெறும் சில விஷயங்களும், சர்ச்சையாகும் வகையில பல விஷயங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தவெக மீது பிரதான எதிர்க்கட்சியான திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. முதல் 6 மாதங்கள் தவெகவை விமர்சிக்க மாட்டோம் என்று திமுக கூறியது. ஆனால் தவெக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்தே ஆட்சியையும், முதலமைச்சர் விஜயையும் திமுக கடுமையாக விமர்சிக்கிறது. அதிலும் அனிதா ராதாகிருஷ்ணன் தவெகவை சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறார்.
6 மாதங்கள் விமர்சிக்க மாட்டோம் என்றவர்கள், 6 நாட்கள் கூட அமைதியாக இல்லை என்று திமுகவை விஜய் கிண்டலடித்தார். இதற்கு பதிலளித்துள்ள அனிதா ராதாகிருஷ்ணன் தன்னுடைய பாணியில் தவெக மற்றும் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

யாரிடம் கேட்பதாம்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாங்கள் ஒரு அரசியல் கட்சி நடத்துகிறோம். திமுக அரசியல் கட்சி. எந்த குற்றச்சாட்டு எப்போது நடந்தாலும் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை. அந்த கடமையை எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்கிறார். அதேபோல எங்கள் இயக்கத்தில் உள்ள மூத்த தலைவர்களும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார்கள். அதனால் 6 மாதம், 8 மாதம், 10 மாதம் கதையெல்லாம் வேண்டாம்.
6 மாதங்கள் இருக்குமா..
இந்த ஆட்சியே 6 மாதங்கள் இருக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 6 மாதம் கழித்து கேள்வி கேளுங்கள் என்றால் யாரிடம் கேட்பது. நடிகர் விஜய் திமுக ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு, போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்ததாக கூறுகிறார். இப்போது என்ன நடக்கிறது. கற்பழிப்பால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல், கள்ள லாட்டரி பழக்கங்கள் அதிகரித்துள்ளன. இதையல்லாம் முதலில் தடுத்த நிறுத்த சொல்லுங்கள்.
மக்களிடம் அச்சம்
கள்ள லாட்டரி அதிகரிப்பதாக கூறி லாட்டரி பழக்கத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் உள்ளது. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தமிழகத்தை குட்டிச் சுவராக்கிவிடுவார்களோ என்கிற அச்சம் தமிழக மக்களிடம் அதிகமாக பெரிதாக உள்ளது. வரும் நாட்களில் தவெக என்கிற கட்சியே இருக்காது. அதனால் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளே இருக்காது என்பதை தவெக அமைச்சர் சூசகமாக கூறியுள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications