Bigg Boss 8 Tamil: பார்க்க சகிக்கல..பிக் பாஸ் நிகழ்ச்சிய உடனே நிறுத்துங்க! வெடித்த திடீர் போராட்டம்
தூத்துக்குடி: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி நன்றாக இல்லை எனவும், விஜய் சேதுபதி மட்டும் ஓகே என கூறி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தமிழகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழில் பல என்டர்டைன்மென்ட் தொலைக்காட்சிகள் இருந்தாலும் விஜய் டிவி எப்போதுமே ஸ்பெஷல் தான். அதன் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் தனித்துவமாக இருக்கும் குறிப்பாக. அது இது எது, நீயா நானா, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விஜய் டிவியை எப்போதும் டாப்பில் வைத்திருக்கிறது.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
அதே நேரத்தில் கடந்த சீசன்களை விட தற்போதைய சீசன் மிகவும் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 18 போட்டியாளர்களுடன் இந்த சீசன் தொடங்கினாலும் விஜய் சேதுபதி தவிர ஆறுதல் எதுவும் இல்லை என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்து வருகிறது. அதே நேரத்தில் விஜய் சேதுபதி அதி மேதாவி தனமாக நடந்து கொள்வதாகவும், போட்டியாளர்களை மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த சீசனில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, முத்துக்குமரன், விஜே விஷால், அருண், தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, சத்யா, சௌந்தர்யா, ஜாக்குலின், சுனிதா, அன்ஷிதா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாஞ்சனா மற்றும் ஆனந்தி ஆகியோர் களமிறங்கினர். அதில்,ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா வெளியேறி விட்டனர். ரயான், ரியா தியாகரஜன், மஞ்சரி, வர்ஷினி வெங்கட், ஷிவ் குமார் மற்றும் ராணவ் ஆகிய ஆறு பேர் வைல்ட் காடு மூலமாக உள்ளே சென்று இருக்கின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. தமிழகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ய வலியுறுத்தியும், 100 நாட்கள் ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள் அறையில் ஆண், பெண், என இரு பாலரையும் அடைத்து வைத்து அந்தரங்க செயல்களை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்வதை தடுத்திட கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தனிமனித உரிமை மீறல் மற்றும் கலாச்சார சீரழிவை உருவாக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்து பார்க்க முடியாத வகையில் பார்க்க சகிக்க முடியாத உடைகள் மற்றும் அந்தரங்கங்களை பதிவு செய்து காட்சி படுத்துவதாகவும், மேலும் பார்க்கும் இளைஞர்களை தவறுகளை செய்வதற்கு தூண்டுகோலாகவும் அமைவதை தடுக்க வேண்டுமென கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் கூறினார்.
தொடர்ந்து, ஆபாச இரட்டை அர்த்த வசனங்களுடன் பேசும் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், இது போன்ற இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த தணிக்கை குழு சினிமாத் துறைக்கு உள்ளது போல, சின்னத்திரை நிகழ்ச்சிக்கும் தணிக்கை முறையினை கொண்டு வர ஒன்றிய மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோட்டாச்சியர் மகாலெட்சுமியிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications