₹1,21,000,00,00,000...மத்திய அரசு அள்ளித் தந்தும், தமிழ்நாடு விரட்டியடித்து.. பாஜக விமர்சனம்
தூத்துக்குடி: இதோ அடுத்த போராட்டம் ஆரம்பித்துவிட்டது.. ₹1,21,000,00,00,000! மத்திய அரசு அள்ளித் தந்தும், தமிழ்நாடு வேண்டாம் என விரட்டியடித்து மிச்சப்படுத்திக் கொடுத்த ஒரு சில திட்டங்களின் மொத்தத் தொகையே ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடிகள்! என் பாஜக நிர்வாகி வினோஜ் செல்வம் கூறியுள்ளார்.
பாஜக நிர்வாகி வினோஜ் செல்வம் வெளியிடப்பட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சிக் காலத்தில், போராட்டங்கள் மூலமாகவே மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்திக் கொடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கும், அதற்காக வீதியில் இறங்கிப் போராடிய மாபெரும் போராட்டக்காரர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!

₹1,21,000,00,00,000! மத்திய அரசு அள்ளித் தந்தும், தமிழ்நாடு வேண்டாம் என விரட்டியடித்து மிச்சப்படுத்திக் கொடுத்த ஒரு சில திட்டங்களின் மொத்தத் தொகையே ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடிகள்!
தூத்துக்குடி கப்பல் தளம் ₹13,000 கோடி மத்திய அரசு மானியம் (2026), பரந்தூர் விமான நிலையம் ₹29,000 கோடி (2026), சென்னை-சேலம் எக்ஸ்பிரஸ் வே (பிறகு கோவை வரை நீட்டிக்கப்பட்டிருக்கும்) ₹10,000 கோடி (2019), குளச்சல் சர்வதேச துறைமுகம் ₹27,500 கோடி (2018) + கேரளாவுக்குச் சென்று கொடிகட்டிப் பறக்கும் அந்தத் திட்டத்தின் வழிவழியாக அங்கு நடக்கும் ₹16,000 கோடி இரண்டாம் கட்ட விரிவாக்கம், கடலூர் நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ₹25,000 கோடி (2015) என அத்தனை மெகா திட்டங்களையும் வெற்றிகரமாக முடக்கி, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளைத் தரும் இந்த மாபெரும் முதலீடுகளை எல்லாம் வாசலிலேயே தடுத்து திருப்பி அனுப்பி, அரசின் கஜானாவை மட்டுமல்ல, இளைஞர்களின் எதிர்காலத்தையும் 'பாதுகாத்த' நமது போராட்ட வீரர்களுக்கு கோடி வணக்கம்! இதைச் செய்துவிட்டு, மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தரவில்லை என்று மேடைகளில் குரல் கொடுக்க நமக்கல்லவா தகுதி இருக்கிறது?!" இவ்வாறு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் உப்பளங்களைக் கையகப்படுத்தி, கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு தீவிரமாக செய்து வருகிறது இதனால், எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்'' எனக் உப்பளத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குஜராத்துக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் தூத்துக்குடியில் அதிகமாக உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 22 லட்சம் டன் வரை உற்பத்தியாகிறது. இந்தத் தொழிலில் நேரடியாக 25,000 தொழிலாளர்களும், மறைமுகமாக 25,000 தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில், ஆண்களைவிடப் பெண் தொழிலாளர்களே அதிகம் ஆவர். இவர்களை பாதிக்கும் என்று கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
