விலகாத மர்மத்துக்கு விடை.. துண்டு துண்டாக சிந்துராஜ்! எலும்பு தான் மிச்சம்.. திணறிய திருச்செந்தூர்.!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே 4 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து தேரிக்காட்டில் புதைக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்தவரின் சடலத்தை 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.

மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் அந்த பகுதியில் மது போதை ஒழிப்பு மறுவாழ்வு மையம் நடத்தி வந்துள்ளார். அவரிடம் மதுரை லூர்துநகரை சேர்ந்த துளசிராமன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.

police crime

இதற்கிடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு துளசிராமன் தனியாக தொழில் செய்ய போவதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கிடையே முன்பகை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துளசிராமன் மகன் சித்துராஜ் ரவீந்திரனை மதுபோதையில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மது போதைக்கு அடிமையான துளசிராமன் மகன் சித்துராஜை, ரவீந்திரன் மது போதை ஒழிப்பு மையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சித்துராஜ் சில நாட்களில் காணாமல் போய் உள்ளார். இதனால் துளசிராமன் மதுரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்பேரில் மதுரை போலீசார் சித்துராஜை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

police crime

ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் சித்துராஜின் தந்தை துளசிராமனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ரவீந்திரனை தனது மகன் தாக்கியது குறித்து போலீசில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு போலீசார் ரவீந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் ரவீந்திரன் மற்றொரு வழக்கில் சிறையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை விசாரணைக்காக போலீசார் எடுத்துள்ளனர்.

ரவீந்திரனிடம் நடத்திய விசாரணை நடத்தியதில் ரவீந்திரன் போதை மறுவாழ்வு மையத்தில் வேலை பார்த்து வந்த திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த பால்பாண்டி, வசந்த், பிச்சை கண்ணன் என்பவருடன் சேர்ந்து சித்துராஜை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி, பாகங்களை திருச்செந்தூர் கொண்டு வந்து குதிரைமொழி தேரியில் உள்ள சுடுகாடு பக்கம் புதைத்ததாக கூறியுள்ளார்.

தந்தையிடம் ஏற்பட்ட தகராறில் தன்னை சித்துராஜ் தாக்கியதற்காக அவரை கொலை செய்ததாக ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை போலிசார் திருச்செந்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் இன்று தோண்டி எடுப்பதற்காக வருகை தந்தனர். காலையில் 11 மணி அளவில் குற்றவாளிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்தை காட்டிய பிறகு தோண்டத் தொடங்கினர். சுமார் 1 மணி நேரமாக தோண்டியும் உடல் கிடைக்கவில்லை.

police crime

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதாலும், தேரிக்காட்டில் மணல்கள் அவ்வப்போது இடம் மாறும் என்பதாலும் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் சுற்றியிருந்த செடிகளை அகற்றி தோண்டினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தோண்டிய இடத்தில் இருந்து மனித எலும்புக் கூடுகள் துண்டு துண்டாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் மதுரை மற்றும் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+