சொந்த தம்பியையே நடு ராத்திரியில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி!
சொத்து தகராறில் சொந்த தம்பியை அண்ணன் சுட்டு கொன்று தலைமறைவாகி உள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி: சொந்த தம்பியையே நடுராத்திரி துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பி தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகியை தூத்துக்குடி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட கடை பகுதியை சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர். இன்னும் சொல்லப்போனால் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் ஆவார்! மேலும் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும்கூட!
சொந்தமாக லாரி ஷெட் ஒன்றினை நடத்தி வருகிறார். இருந்தாலும் இவர் மீது கொலை உள்ளிட்ட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்!

சொத்து தகராறு
இவருடைய தம்பி சிம்சன். வயது 32. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நேற்று சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மனைவி வீட்டுக்கு வந்தவுடன் சொத்து தகராறு ஆரம்பமானது. நேற்றிரவு பில்லா ஜெகன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிம்சன் தொழிலில் பங்கு கேட்டு சண்டை போட்டார்.

பெரிய தகராறு
அப்போது பில்லா ஜெகன் போதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அண்ணன்-தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரிய தகராறாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சிம்சனை சுட்டார்.

உயிரிழந்தார்
இதில் சிம்சனின் தலை, மற்றும் தொடையில் குண்டு பட்டு ரத்தம் கொட்டி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதை பார்த்ததும் பதறிபோன பில்லா ஜெகன் அங்கிருந்து தப்பிவிட்டார். தகவலறிந்து வடபாகம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, இது சம்பந்தமான விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

கள்ளத்துப்பாக்கி
அப்போதுதான் பில்லா ஜெகன் வைத்திருந்தது கள்ளத்துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. இதனால்சொந்த தம்பியை கொன்றுவிட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ள பில்லா ஜெகனை தேடி வருகிறார்கள்.
-
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம் -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்!












Click it and Unblock the Notifications