தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம், அரசு வேலை- முதல்வர்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசியதில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியின் குடும்பத்திற்கு, ரூ.50 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியை சேர்ந்த குற்றவாளி துரைமுத்து என்பவர் மீது 2 கொலை வழக்கு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை பிடிப்பதற்காக இன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் காவலர்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.

CM Edapadi Palaniswami announced Rs 50 lakh compensation for constable Subramanian relative

அப்போது குற்றவாளி தப்ப முயன்ற போது காவலர்கள் தொடர்ந்து அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது காட்டு பகுதியில் இருந்த குற்றவாளி அங்கிருந்த காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளார்.

இந்த நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் (28) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

24மணி நேரத்தில் 9பேர் சாவு.. குவியும் நோயாளிகள், திணறும் புதுச்சேரி, நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்!24மணி நேரத்தில் 9பேர் சாவு.. குவியும் நோயாளிகள், திணறும் புதுச்சேரி, நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்!

சுப்பிரமணிக்கு மனைவியும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவலர் சுப்பிரமணியின் குடும்பத்திற்கு, ரூ.50 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy has announced that the government will provide relief of Rs.50 Lakhs and a government job for constable Subramanian's relative.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X