திமுக ஆட்சியில் ஊழல்... பட்டியலிட்டு பேசி தூத்துக்குடியில் கடுகடுத்த முதலமைச்சர்..!
தூத்துக்குடி: முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இ.பி.எஸ்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக கூறினார்.
மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் பலரது பெயரை சுட்டிக்காட்டிப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரம் வரும் போது எல்லாவற்றையும் வெளியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கோபம்
கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அப்போது வழக்கத்தை விட அவரது பேட்டியில் கோபம் சற்று அதிகம் இருந்தது. திமுக மீது கடுகடுத்த நிலையில் அரசு பெயருடனும் புகழுடனும் திகழ்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்றார்.

மலிவான அரசியல்
ஸ்டாலின் மலிவான அரசியல் விளம்பரத்தை தேடி வருவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, தாமோ அன்பரசன், சுரேஷ்ராஜன், தமிழரசி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உள்ளிட்ட பலர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறினார். மேலும், நேரம் வரும் போது திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளியிடுவேன் எனவும் தெரிவித்தார்.

முதல்வர் விமர்சனம்
பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அதனால் தான் அதை விமர்சிப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். மேலும், ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ள அனைவரும் திமுக ஆட்சியிலும் டெண்டர் எடுத்து பணி செய்தவர்கள் தான் எனக் கூறியுள்ளார்.

ஒத்துழைப்பு
கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க பொதுமக்கள் போதிய அளவு அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வளர்ந்த நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் சூழலில் அரசு மேற்கொண்ட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனாவை கட்டுக்குள் வைக்க முடிந்ததாக தெரிவித்தார். மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications