துள்ளும் தூத்துக்குடி.. மின்சார கார் நிறுவனத்துக்கு ஸ்டாலின் அடிக்கல்! ரூ.16,000 கோடியில் பிரமாண்டம்
தூத்துக்குடி: தனியார் மின்சார கார் நிறுவனத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உலக முதலீட்டாளா் மாநாட்டு நடைபெற்றது. இதில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் வியட்னாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற தனியாா் மின்சார காா் தொழிற்சாலை தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொழுத்திடப்பட்டது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் வின் ஃபாஸ்ட் காா் உற்பத்தி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் அமைந்து இருக்கும் சிப்காட் வளாகத்தில் இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வின் ஃபாஸ்ட் கார் தொழிற்சாலைக்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 408 ஏக்கா் பரப்பளவில் நிலம் தோ்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வியட்னாம் நாட்டு முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.

அத்துடன் தூத்துக்குடி நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரத்தில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. சுமாா் 20 ஆயிரம் போ் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.
குறிப்பாக நிவாரணத் தொகை, வீடு இடிந்தவா்களுக்கு புதிய வீடு கட்ட நிதி உதவி, புதிய படகு வாங்க மீனவா்களுக்கு நிதியுதவி, மகளிா் சுய உதவிக் குழுவினர், சிறு வணிகா்களுக்கு குறைந்த வட்டியில் கடன் போன்ற உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறாா். முதலமைச்ச மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தென் மாவட்டங்களான குமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ள மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications