அக்கா அமைச்சர் - தம்பி மேயர்! முற்றும் மோதல் குமுறும் திமுக நிர்வாகிகள்! விழிபிதுங்கும் அதிகாரிகள்!
தூத்துக்குடி: அமைச்சர் கீதாஜீவனுக்கும் அவரது தம்பியும் தூத்துக்குடி மேயருமான ஜெகன் பெரியசாமிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துகொண்டே செல்வதால் அதிகாரிகள் யார் பேச்சை கேட்பது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
கனிமொழி எம்.பி. கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அக்காவும், தம்பியும் ஒன்றாக கலந்துகொண்டாலும் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்துக் கூட பேசுவதில்லையாம்.

புகைப்படத்தில் அமைச்சர் கீதாஜீவனும், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியும் ஒன்றாக நிற்பதை பார்த்தால் இவர்களுக்குள் சண்டையா, ச்சே..ச்சே வாய்ப்பே இருக்காது என்று தான் எண்ணத்தோன்றும். ஆனால் நிஜம் வேறு.
இன்னும் சொல்லப்போனால் அதிகாரிகள் முன்னிலையிலேயே இருவரும் வாக்குவாதம் செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது.
இதனிடையே அமைச்சர் கீதாஜீவனுக்கும் அவரது தம்பி ஜெகன் பெரியசாமிக்கும் இடையே விழுந்துள்ள விரிசலால் தூத்துக்குடியில் பல பணிகள் தேக்கமடைந்து நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஒப்பந்தப் பணிகள் விவகாரத்தில் அக்காவுக்கும், தம்பிக்கும் இடையே மாறுபட்ட கருத்து நிலவுவதும், அதிகாரத்தில் யார் கை ஓங்குகிறது என்பதும் மோதலுக்கான அடிப்படை காரணமாக பார்க்கப்படுகிறது.
அக்கா, தம்பி சண்டை குறித்து கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து குமுறும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவினர் இதற்கு ஒரு முடிவு கட்டுமாறு நச்சரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனிமொழியோ இருவருமே வேண்டப்பட்டவர்கள் என்பதாலும், அக்கா தம்பி என்பதாலும் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்து வருகிறாராம். இருப்பினும் இந்த விவகாரத்தை திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தூத்துக்குடி திமுக நிர்வாகிகள் சிலர் உறுதியாக உள்ளனராம்.
அமைச்சர் கீதாஜீவனுக்கும் அமைச்சர் அனித ராதாகிருஷ்ணனுக்கும் இடையே தான் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருக்கும். இப்போது என்னவென்றால் உடன் பிறந்த தம்பியுடனும் அமைச்சர் கீதாஜீவன் மல்லுக்கட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தன்னை டம்மி மேயர் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள ஜெகன் பெரியசாமி, தனக்குரிய அதிகாரத்தின் படி மாநகராட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications