இந்தாங்க.. கொரோனா கசாயம் குடிங்க.. மயங்கி விழுந்த கணவர்.. மனைவி செய்த அதிரடி காரியம்.. போலீஸ் ஷாக்!

கொரோனா கசாயம் தந்து நகையை கொள்ளையடித்த மனைவி கைதானார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: "இந்தாங்க.. கொரோனா கசாயம் குடிங்க" என்று சொல்லி தூக்க மாத்திரையை கலந்து குடிக்க வைத்தேன்.. என் கணவர் குடிச்சிட்டு தூங்கிட்டாரு.. அப்போ நான் நகையை கொள்ளை அடிச்சிட்டேன்" என்று மனைவி வாக்குமூலம் தந்துள்ளார்.. இதனை கேட்டு தூத்துக்குடி போலீசாரே மிரண்டு விட்டனர்!

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் 58 வயதான வின்சென்ட்... துறைமுக ஊழியர்.. இவரது மனைவி ஜான்சி.. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள்... 2 பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் தம்பதி மட்டும் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு என்பதால் இருவருமே வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.. இந்த சமயத்தில் வின்சென்ட் தாளமுத்து நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்தார்.

பீரோ

பீரோ

அதில், பூட்டப்பட்ட தன்னுடைய வீட்டில் இருந்த பீரோவில் 100 சவரன் நகைகள் கொள்ளை எனவும் கண்டுபிடித்து தரவும் சொன்னார். 2 பேரும்வீட்டிலேயே இருந்த நிலையில் கொள்ளை எப்படி போனது என்பது குறித்து போலீசார் ஆய்வில் இறங்கினர்.. அதுமட்டுமல்லாமல் 100 சவரனை ஏன் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்தது.

விசாரணை

விசாரணை

விசாரணையும் ஆரம்பமானது.. துறைமுக ஊழியர் என்றாலும் வின்சென்ட் கஷ்டப்பட்டுதான் பணம் சம்பாதித்துள்ளார்.. 2 பெண்களையும் கட்டி கொடுத்து, பணத்தை மிச்சப்படுத்தி அதில்தான் நகைகளையும் சேமித்து வைத்துள்ளார்... முதலில் லாக்கரில்தான் வைத்திருக்கிறார்.

லாக்கர்

லாக்கர்

சில நாட்களுக்கு வின்சென்ட்டுக்கு ஒரு போன் வந்துள்ளது.. அதில் ஒரு பேசியுள்ளார்.. வங்கியில் பாதுகாப்பு குறைவா இருக்கு, அதனால உங்கள் மனைவியை அழைத்து வந்து நகையை எடுத்து கொண்டு போய்விடுங்கள் என்று சொல்லி உள்ளார்.. அதனால்தான் லாக்கரில் இருந்து நகைகளை கொண்டுவந்து பீரோவில் வைத்திருந்தது தெரியவந்தது.

ஜான்சி

ஜான்சி

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார் உடனே சம்பந்தப்பட்ட பேங்குக்கு போன் செய்து யார் பேசினார்கள் என்று விசாரித்தனர். ஆனால், யாருமே பேங்கில் இருந்து போன் செய்ய காணோம்.. அதனால் போலீசார் ன்னும் குழம்பி விட்டனர்.. வீட்டில் 2 பேர் மட்டுமே இருக்கும் நிலையில், யார் வீட்டிற்குள் வந்திருப்பார்கள் என்று சந்தேகம் அதிகமாகவே எழுந்தது.. அதனால் ஜான்சியிடம் விசாரணை ஆரம்பமானது.. எசகுபிசகாக உளற ஆரம்பித்தார் ஜான்சி.. பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார். இதை பற்றி அவர் சொன்னதாவது:7

வாக்குமூலம்

வாக்குமூலம்

''ஏலச்சீட்டு நடத்திவந்தேன்... நிறைய பேர் ஏலத்தொகையை கட்டாமல் ஏமாற்றிவிட்டனர்.. 10 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்தது.. வட்டி மட்டுமே மாசம் 35 ஆயிரம் ரூபாய் கட்டினேன்.. என்னால் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியல.. என் கணவர் ஒரு மகா கஞ்சன்.. நான் பணம் கேட்டால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்தார்.. எல்லா நகையையும் பேங்கில் கொண்டு போய் வைத்துவிட்டார்.. பணத்தேவைக்கு அந்த நகையை எடுக்க நான் முடிவு செய்தேன்.

நகைகள்

நகைகள்

அதனால வீட்டுக்கு வெளியே போய் இன்னொரு போனில் இருந்து நான்தான் என் கணவருக்கு பேசினேன்... பேங்க் லாக்கரில் பாதுகாப்பில்லை என்று சொல்லி நகையை கொண்டு போக சொன்னேன்.. என் குரலையும் மாற்றி பேசினேன்.. நான் நினைச்ச மாதிரியே பேங்கில் இருந்து நகையை எடுத்து வந்து வீட்டில் வைத்தார்.. இந்த மொத்த நகையையும் எடுக்க முடிவு செய்தேன்.. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப கசாயம் தர்றேன்னு சொல்லி... அதில் தூக்க மாத்திரையையும் கலந்து குடுத்துட்டேன்.. அதை என் கணவர் குடிச்சிட்டு தூங்கிட்டாரு.

புதைச்சிட்டேன்

புதைச்சிட்டேன்

அவர் இடுப்பிலதான் சாவிக் கொத்து இருக்கும்.. தூங்கினபிறகு அதை எடுத்து பீரோவில் இருந்து 93 சவரன் நகையை எடுத்துக்கிட்டேன்.. வீட்டுக்கு வெளியே குழிதோண்டி நகையை புதைச்சிட்டேன்.. பிறகு பீரோவில் இருந்த துணிகளை இழுத்து வெளியே போட்டு கலைத்தேன்,.. பீரோ சாவியை தூக்கி வீசிட்டேன்" என்றார். இதையெல்லாம் கேட்டு அரண்டு போன போலீஸார், ஜான்சியை கைது கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+