நல்லது பாதி..கெட்டது மீதி! 4 மாத தவெக ஆட்சி.. பாதிக்கு பாதி மார்க் தான்! மார்க்சிஸ்ட் சண்முகம் பளீர்
தூத்துக்குடி: தவெக ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் வரவேற்கத்தக்க விஷயங்களையும் செய்திருக்கிறார்கள், எதிர்த்து போராட வேண்டிய விஷயங்களையும் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். ஆகவே ஆதரவு, எதிர்ப்பு என்கிற இரட்டை நிலைப்பாட்டில் யல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31வது மாநில மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்றிரவு தூத்துக்குடி VVD சிக்னலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்வில் பேசிய அவர்," இன்றைக்கு தமிழ்நாட்டில் தவெக என்ற ஒரு புதிய கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்து நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு மாதங்களில் வரவேற்கத்தக்க விஷயங்களையும் அவர்கள் செய்திருக்கிறார்கள்.
சண்முகம்
எதிர்த்து போராட வேண்டிய விஷயங்களையும் அவர்கள் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். ஆகவே ஆதரவு எதிர்ப்பு என்கிற இரட்டை நிலைப்பாட்டில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையை சொல்லப்போனால் இன்றைய தினம் ஒரு அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 21ம் தேதி தமிழ்நாடு அரசின் சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து சட்டம் ஒழுங்கு சம்பந்தமான விவரங்களை கேட்க முடியாது என்கிற ஒரு அரசாணையை வெளியிட்டு இருக்கிறார்கள் இந்த ஆணை காலையில் தான் வெளி உலகத்திற்கு வந்தது.
தவெக அரசு
தமிழ்நாடு அரசின் அரசர்களின் செப்டம்பர் 21ஆம் தேதியே வெளியிட்டு இருந்தாலும் அது வெளி உலகத்திற்கு வந்தது இன்று தான். ஆகவே அதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததற்கு பிறகு இன்றைய தினம் தமிழ்நாடு அரசு அந்த அரசாணையை திரும்பப் பெற்றுள்ளது.
சுற்றறிக்கை
ஏற்கனவே கம்யூனிஸ்டுகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சொல்லி ஒரு வட்டாட்சியர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி அது திரும்ப பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இடதுசாரிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க கூடிய மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி பிறகு அது திரும்பப் பெறப்பட்டது.
இப்போது நான் தமிழ்நாடு அரசை கேட்க விரும்புவது, இப்படி தொடர்ச்சியாக எதிர்ப்புக்கு பிறகு நீங்கள் அரசாணையை திரும்ப பெறுகிறீர்கள்.
முதலமைச்சர் விஜய்
இத்தகைய உத்தரவுகளை போடும்போது முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களுடைய ஒப்புதலோடு தான் இவையெல்லாம் வெளியிடப்படுகிறதா? அல்லது இங்கு அதிகாரிகளுடைய ராஜ்ஜியம் நடக்கிறதா? என்கிற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்ப்பு வந்த காரணத்தினால் அதை திரும்ப பெறுவது நியாயமான நடவடிக்கையாக கருத முடியாது.
சட்டம் ஒழுங்கு
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஏராளமான லாக் அப் டெத் நடந்து கொண்டிருக்கிறது. கைது செய்யப்படுகிறவர்களின் கைகால்கள் உடைக்கப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்கு காரணமான அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே இருந்த தமிழ்நாடு அரசாங்கமும் இப்போது இருந்த தமிழ்நாடு அரசாங்கமும் நாங்கள் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று தான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 13 உயிர்களை கொலை செய்தவர்களுக்கு எந்த விதமான தண்டனையும் கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications
