குலசை முத்தாரம்மன் கோவிலில் யூடியூபர்கள் இடையூறு.. திண்டாடும் பக்தர்கள்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா தொடங்கியுள்ள நிலையில், யூடியூபர்கள் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக பக்தர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் வீடியோ எடுத்து இடையூறு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. குலசை முத்தராம்மன் கோவில் வளாக பகுதியில் சுற்றி திரிவதும், அம்மன் வீதி உலாவின் போது பக்தர்களை தரிசிக்க விடாமல் முதல் வரிசையில் நின்று கொண்டு வீடியோ எடுப்பது பக்தர்களுக்கு இடையூறாக அமைந்துள்ளது.

கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து யூடியூபர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Kulasai Mutharamman Temple Devotees Face Difficulties - Will Action Be Taken

தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.10 நாட்கள் நடைபெறும் இந்த தசரா திருவிழா நாளில் லட்சக்கணக்கான மக்கள் அம்மனை தரிசித்து அருள் பெறுவார்கள். திருவிழா நாட்களில் தினம் தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

பக்தர்களை தரிசிக்க விடாமல்

தசரா திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து காப்பு கட்டும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதனால், தசரா நாளில் குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இதற்கிடையே, சமீப நாட்களாக குலசையில் யூடியூபர்கள் பலரும் வீடியோ கேமராக்கள் மற்றும் செல்போன்களுடன் குலசை முத்தராம்மன் கோவில் வளாக பகுதியில் சுற்றி திரிவதும், அம்மன் வீதி உலாவின் போது பக்தர்களை தரிசிக்க விடாமல் முதல் வரிசையில் நின்று கொண்டு வீடியோ எடுப்பதும் பக்தர்களுக்கு இடையூறாக அமைந்துள்ளது.

யூடியூபர்களுக்கு எதிராக புகார்

செல்போன்களை தூக்கி பிடித்துக்கொண்டு வீடியோ எடுப்பதால், அம்மனை தரிசிக்க முடிவதில்லை என்று பக்தர்களும் குற்றசாட்டு வைத்துள்ளனர். யூடியூபர்கள் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக வீடியோக்களை எடுப்பதும் லைக்ஸ்களை ஆயிரக்கணக்கில் அள்ளுவதற்காகவும் இப்படி பக்தர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் இடையூறு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து யூடியூபர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிப்பதால், இன்ஸ்டா ரீல்ஸ்களுக்காக முண்டியடித்துக்கொண்டு வீடியோ எடுக்கும் நிகழ்வுகளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

சினிமா பாடல் இசைக்க அனுமதியில்லை

இதற்கிடையே, கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு தினந்தோறும் தசரா குழுவினர் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். ஆனால் கோவில் வளாகத்தில் மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட அம்பாளுக்குரிய பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பேண்ட் செட் மற்றும் இதர நவீன இசைக்கருவிகளைக் கொண்டு சினிமா பாடல்களை இசைப்பதற்கும், அந்த பாடல்களுக்கு ஏற்ப நடனமாடுவதற்கும் அனுமதி இல்லை. எனவே, கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து, அதற்கேற்ப தங்களது நிகழ்ச்சிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பக்தர்கள் மற்றும் தசரா குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+