பைக் ரேஸ் அட்டகாசம்.. தட்டிக்கேட்ட பொதுமக்களை அரிவாளால் வெட்ட முயன்ற கும்பல்.. தூத்துக்குடி ஷாக்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தீபாவளி நாளில் பைக் ரேஸ் ஓட்டிய இளைஞர்களை தட்டிக்கேட்ட பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டி வெட்ட முயன்ற பகீர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 5 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அடுத்த நேரு காலனி தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 8.30 மணியளவில் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டி ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Diwali Bike Racers Threaten Public with Machete Police Launch Hunt for Five Youths

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்களை அழைத்து தட்டிக் கேட்டுள்ளனர். இதையடுத்து புதுநகரைச் சேர்ந்த சுனில், அஜய், சிவபெருமாள், கந்தசாமி, முத்துகிருஷ்ணன் ஆகிய ஐந்து இளைஞர்கள் அங்கு வந்து பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தங்களிடம் வைத்திருந்த அரிவாளைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதுடன், சிலரை வெட்ட முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக சாயர்புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதை அறிந்த இளைஞர்கள், தாங்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், இளைஞர்கள் பொதுமக்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டும் காட்சிகளை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த தீபன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் ஐந்து இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக் கேட்ட பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+