மீண்டும் கனிமொழி.. தூத்துக்குடியில் பின்தங்கிய அதிமுக.. தந்தி டிவி சர்வேயில் பாஜக கூட்டணிக்கு ஷாக்
தூத்துக்குடி: வரும் லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளரான கனிமொழி எம்பி மீண்டும் வெற்றி பெறுவார் என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2வது இடத்தை அதிமுக பிடிக்கும் எனவும், பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமாகவும், நாம் தமிழர் கட்சியும் ஒரே அளவில் ஓட்டுகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி சார்பில் இந்த கருத்து கணிப்பு என்பது மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி தூத்துக்குடி தொகுதியில் வெல்வது யார்? என்பது பற்றி ரிசல்ட் வெளியாகி உள்ளது.
அதாவது தூத்துக்குடி தொகுதியில் சிட்டிங் எம்பியான கனிமொழி மீண்டும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத் போட்டியிடுகின்றனர்.
இதில் திமுக 46 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை ஓட்டுகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கனிமொழி எம்பி வெற்றியின் உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தூத்துக்குடியின் புதிய எம்பியும் கனிமொழி தான் என்பதை தந்தி டிவி கருத்து கணிப்பு உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 2ம் இடம் பிடிப்பார். அதாவது அதிமுகவுக்கு 28 முதல் 34 சதவீதம் வரை ஓட்டு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரசும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் ஒரே அளவிலான ஓட்டுகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜிகேவாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜயசீலன், நாம் தமிழர் வேட்பாளர் ரொவினா ரூத் ஆகியோர் தலா 6 சதவீதம் முதல் 12 சதவீத ஓட்டுகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்கள் ஒன்று முதல் 3 சதவீத ஓட்டுகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications