ராஜபக்சேவை ஓடவிட்ட மாதிரி விஜய்யை ஓடவிடுவார்கள்.. திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு
சென்னை: விஜய் ஆட்சி மரணப் படுக்கையில் இருக்கிறது எனவும், ராஜபக்சேவை ஓடவிட்ட மாதிரி ஜோசப் விஜய்யை மக்கள் ஓடவிடுவார்கள் எனவும் விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார். மேலும், தவெக அமைச்சர்கள் ஜோக்கர்கள் மாதிரியும், கலைக்கூத்துக்காரர்கள் மாதிரியும் இல்லை, தரங்கெட்ட அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
காவல்துறையில் இருக்கக்கூடிய ஆய்வாளருக்கு ஒரு நீதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவுக்குஒரு நீதியா? என்று கேள்வி அவர், வைகோவை அரசியல் மனநோயாளி என்றும் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியதாவது:-

விஜய்க்கு ஏன் அரோகரா போட வேண்டும்?
திருச்செந்தூரில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் போது, முதல்வருக்கு அரோகரா என்று கூறுகின்றனர். முதல்வருக்கு அரோகரா போட வேண்டிய அவசியம் என்ன? இவர்களுக்கு அரோகரா பற்றி தெரியுமா? முதலில்.. துணிகளைச் சலவை செய்வதற்கு மூட்டையாக எடுத்துச் செல்லும்போதும், பல்லக்கு தூக்கிச் செல்லும்போதும், ஏலேலோ என்று கூறுவதற்குப் பதிலாக அரோகரா என்று கூறுங்கள்.. நமது சுமைகளை சிவபெருமான் தீர்த்து வைப்பார் என்று திருஞானசம்பந்தர் கூறினார். முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் என்ன அரோகரா தேவை இருக்கிறது?..
ஆய்வாளருக்கு ஒரு நீதி! எம்.எல்.ஏவுக்குஒரு நீதியா?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ., பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இதே தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் காவல் ஆய்வாளர், காவலர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியதாக நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். காவல்துறையில் இருக்கக்கூடிய ஆய்வாளருக்கு ஒரு நீதி! கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவுக்குஒரு நீதியா?
பள்ளிக் குழந்தைகளுக்கு கேக்
பள்ளிக் குழந்தைகளுக்கு கேக்.. இங்கு என்ன உணவுப் பஞ்சமா இருக்கிறது? நாட்டில் என்ன பிரச்சினை இருக்கிறது? அவங்கவங்க அழகாகப் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது, குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் சொன்னால் அவர்களே கேக்கினை ஸ்பான்சர் செய்து வழங்கப் போகிறார்கள். இந்தக் கேக் வழங்க எவ்வளவு கோடி செலவிடப்பட்டுள்ளது?
உணவுத்துறை அமைச்சருக்கும் விவசாயத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார். அவர் சென்னைவாசி. எந்தெந்த நேரத்தில் என்னென்ன அரிசி விளைவிக்க முடியும் என்று உணவுத்துறை அமைச்சருக்குத் தெரியுமா? எங்கள் ஊர் தோட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகளைப் போய்த் தூத்துக்குடியில் போய் வாங்க முடியுமா?
அரசியலுக்கே அவமானமானவர்கள்
ஊரான் ஊரான் தோட்டத்துல.. ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா.. காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி.. காயிதம் போட்டான் வெள்ளக்காரன் என்பது போல, எங்கள் ஊரில் விளையாடுகிற கத்திரிக்காயைத் தூத்துக்குடியில் போய் வாங்கணுமா? மழைக்காலத்தில் காய்கறி விலை குறையத்தான் செய்யும், கூடாது. ஒருவேளை வெள்ளம் வந்து அழிந்து போனால் கூடும். இப்போ எங்கே வெள்ளம் வந்துச்சு? காவேரி, தாமிரபரணியில் தண்ணீரே போகல, டேம் நிரம்பல, குளங்களில் தண்ணீர் இல்லை. பிறகு எப்படி காய்கறி விலை குறையும்?
இந்த ஆட்சியில் அமைச்சர்கள் எல்லாம் முட்டாள்தனமான பதில்களைச் சொல்கிறார்கள், மூடர்களைப் போல் பேசுகிறார்கள். அமைச்சர்கள் கேலிக்கூத்தான ஜோக்கர்களாக, ஜோக்கர்கள் என்று கூட இவர்களைச் சொல்லக்கூடாது. எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, நாகேஷ், வடிவேலு, சூரி எனப் பல்வேறு நகைச்சுவையாளர்கள் நல்ல கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். தவெக அமைச்சர்கள் ஜோக்கர்கள் மாதிரியும், கலைக்கூத்துக்காரர்கள் மாதிரியும் இல்லை, தரங்கெட்ட அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். அரசியலுக்கே அவமானமானவர்கள் மாதிரி இருக்கிறார்கள்.
ராஜபக்சேவை போல் விஜய்யை ஓட விடுவார்கள்
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொன்ன மாதிரி புரட்சி வரும். நீங்கள் இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் மக்கள் பின்னங்கால் பிடரியில் அடித்து ஓடுகிற அளவிற்கு பெரிய புரட்சி வரும். ராஜபக்சேவை ஓடவிட்ட மாதிரி ஜோசப் விஜய்யை மக்கள் ஓடவிடுவார்கள்.
எட்டயபுரம் பகுதியில் பட்டாசு ஆலைக்கு அனுமதி கொடுத்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். மாவட்ட ஆட்சியர் நிறுத்தி வைத்ததை கையூட்டுப் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்தால் கண்டிக்கத்தக்கது. பட்டாசு ஆலைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கட்டாயப்படுத்தினால், அமைச்சரை கட்டாயமாக விரட்டியடிப்போம்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் போல வைகோ
10 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை. முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் வரக்கூடிய உதவித்தொகை வழங்கப்படவில்லை. எதையும் இவர்கள் சிந்திக்கவில்லை.
மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு (வைகோ) பதில் சொல்ல முடியாது. வைகோவைப் போன்று ஒரு 420-ஐப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு நிலைத்தன்மை இருக்கிறதா? குமரி முனையிலிருந்து கூடுவாஞ்சேரி வரை நடைப்பயணம் சென்றிருக்கிறேன். சண்டாளி ஜெயலலிதா ஆட்சியை ஒழிக்க என்று கூறியவர், கூடுவாஞ்சேரியில் சென்று அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். கருணாநிதி பேனா நான் மூடி என்று கூறியவர். பேனா மூடி திறந்தால் மை உறைந்துவிடும் என்பதால் என் தலைவர் மூடி பாதுகாத்தவர் என்று சொன்ன வைகோவிற்கு வெட்கமா இல்லை?
தேர்தலின்போது ஸ்டாலின் ஆட்சி ஸ்ட்ராங்காக வரும் என்று சொன்னார். இப்போது யாரிடம் கையூட்டுப் பெற்றிருக்கிறார்? வைகோவும், அவருடைய மகனும் வேலை வெட்டியில்லாமல் இருக்கிறார்கள். வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட அவரால் தக்கவைக்க முடியவில்லை. ஊர் இல்லாத ஊருக்கு எவனோ நாட்டாமை செய்தானாம். வைகோ நாட்டாமை செய்த எல்லாமே காலியாகிப் போய்விட்டது.. என்று கூறினார்.






Click it and Unblock the Notifications
