தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான.. ஸ்னோலின் சகோதரர் திருமண விழாவில் கனிமொழி!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் திருமண விழாவில், திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான தாமிர உருக்கு ஆலை உள்ளது. இந்த ஆலையின் மாசு காரணமாகச் சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

ஹிஜாப் சர்ச்சை.. பள்ளிகள் திறப்பு.. - கர்நாடகத்தில் கொடி அணிவகுப்பு நடத்திய பாதுகாப்புப் படை! ஹிஜாப் சர்ச்சை.. பள்ளிகள் திறப்பு.. - கர்நாடகத்தில் கொடி அணிவகுப்பு நடத்திய பாதுகாப்புப் படை!

இந்த ஆலையை சுற்றியுள்ள பல கிராமங்களில் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

 ஸ்டெர்லைட் விவகாரம்

ஸ்டெர்லைட் விவகாரம்

இதன் காரணமாகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை அப்பகுதி மக்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் 100 நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். அதுநாள் வரை மக்கள் போராட்டம் அமைதியான முறையிலேயே நடைபெற்று வந்தது.

 துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

போராட்டத்தின் 100வது நாள் அன்று (மே 22, 2018) போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். அப்போது போலீசார் சுட்டதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 உயிரிழந்த 18 வயது ஸ்னோலின்

உயிரிழந்த 18 வயது ஸ்னோலின்

போலீசாரின் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான இரு பெண்களில் ஒருவர், அப்போது வெறும் 18 வயதே ஆன ஸ்னோலின். வழக்கறிஞராக வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த ஸ்னோலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது துப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் கோரமாக வாயில் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 நபர்களில் இளவயது நபர் இவர்தான்.

 கனிமொழி எம்பி

கனிமொழி எம்பி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை 3 ஆண்டுகளைக் கடந்து, இப்போதும் தொடர்கிறது. இந்தச் சூழலில் போராட்டத்தின் போது உயிரிழந்த ஸ்னோலின் சகோதரர் ஜான் ராஜ்ஜின் திருமண விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் உடன் சென்று திமுக எம்பி கனிமொழி மணமக்களை வாழ்த்தினார். மேலும், இது தொடர்பான படங்களைக் கனிமொழி தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

English summary
DMK MP Kanimozhi in Snowlin's brother wedding. Snowlin was killed in Thoothukudi shooting in 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X