Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரு பெருசுனு அடிச்சுக் காட்டு..டபுள் எஞ்ஜின் - டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது! களைகட்டிய யுத்தம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் பதிலடி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இருதரப்பும் மாறி மாறி போஸ்டர் ஒட்டி வருவதால் தூத்துக்குடி அரசியல் களைகட்டி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகின்றன. இந்த முறை நான்கு கட்சிகள் இடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கை தயார் செய்தல் போன்ற பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே திமுக, கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பை தொடங்கியுள்ளது.

tuticorin aiadmk dmk

2026 சட்டமன்றத் தேர்தல்

அதேபோல் அதிமுகவிலும் இந்த பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், மாநில பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட தனி குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து தனது செய்தியாளர் சந்திப்பின் போதும் பிரச்சாரத்தின் போதும் பல்வேறு வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். மீண்டும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்து குலவிளக்கு திட்டம் ஆகியவை அமல்படுத்தப்படும் எனக் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை காப்பியடித்து அதிமுக அறிவிப்பதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் தான் தூத்துக்குடியில் போஸ்டர் அரசியல் களை கட்டி உள்ளது.

தேர்தல் போஸ்டர் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் பல்வேறு இடங்களில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் என்ற பெயரில் சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 2000, மகளிர் மற்றும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிவிப்புகள் குறித்து மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற வாசகத்துடன் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

டபுள் எஞ்சின் போஸ்டர்

அந்த போஸ்டருக்கு அருகில் டபுள் எஞ்ஜின் - டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது.. அடிமைகளை விரட்டுவோம் - தமிழ்நாட்டைக் காப்போம் என்ற வாசகத்துடன் ஒரு ரெயிலில் NDA என்ற எழுத்துடன் பிரதமர் நரேந்திர மோடி,, அதிமுக பொதுச் செயலாளர் எ டப்பாடி பழனிச்சாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி கே வாசன் உள்ளிட்ட தலைவர்கள் ரயிலில் தொங்குவது போன்ற புகைப்படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் எந்த கட்சி.. எந்த அமைப்பு சார்பில் ஒட்டப்பட்டது என்ற விவரம் எதுவும் அதில் இல்லை. நகர் முழுவதும் இந்த 2 போஸ்டர்கள் அடுத்தடுத்து ஒட்டப்பட்டு காட்சி அளிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+