10 நாள் கோலாகலம்! தசரா திருவிழா.. குலசை முத்தாரம்மன் கோயிலில் உண்டியல் வருமானம்.. இத்தனை கோடியா?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக கொண்டாடப்படும் குலசை தசரா பண்டிகை கடந்த 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்தினர். இவற்றில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலில் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

kulasai mutharamman temple thoothukudi

இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் தசரா செட் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியும், காணிக்கை வசூலித்தனர். தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் கோயில்களுக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் கடற்கரையில் குவிந்தனர்.

பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்தினர்.

கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி கடந்த 5 நாட்கள் நடைபெற்றது.
கோயில் பணியாளர்கள், பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோயிலில் மொத்தம் 18 நிரந்தர உண்டியல்கள், 65 தற்காலிக உண்டியல்கள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில், மொத்தம் ரூ.4,57,23,30 இருந்தது. அதுமட்டும் இன்றி 115 கிராம் தங்கம், வெள்ளி பொருட்கள் 2 கிலோ 689 கிராம் ஆகியவற்றையும் பக்தர்கள் செலுத்தி இருந்தனர். 15 வெளிநாட்டு பண நோட்டுகளையும் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தி இருந்தனர். கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ.46 லட்சத்து 1,514-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+