"ஏர் பேக்" விரிந்தும்.. மரத்தில் கார் மோதி.. ஹோட்டல் அதிபர் பலி.. திருச்செந்தூர் மக்கள் அதிர்ச்சி!
தூத்துக்குடி: வேகமாக வந்த கார்.. ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் மோதியதில் பிரபல ஹோட்டல் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.. காரில் இருந்த ஏர் பேக் இரு பக்கமும் விரிந்தும்.. உயிர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்தவர் கிட்டப்பா.. அர்ச்சனா ஹோட்டல், உதயம் காபி பார், கிட்டு காபி பார் அதிபர்.. இவர் ஒரு ஆன்மிகவாதியும்கூட... திருச்செந்தூர் மக்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலமான நபர் இவர்.. 51 வயதாகிறது.

வசந்தி என்ற மனைவியும், சக்தி என்ற 22, கந்தன் 16 என்ற 2 மகன்களும் உள்ளனர். ஒருவர் காலேஜிலும், இன்னொரு மகன் பள்ளியிலும் படித்து வருகிறார்கள்.
திருச்செந்தூர் சாந்தி பேக்கரி அதிபர் ராதாகிருஷ்ணன் இவரது நெருங்கிய நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, இன்று தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கிட்டப்பாதான் ஓட்டி சென்றார்.

விடிகாலை நேரம்.. முக்காணி அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நடுரோட்டில் தாறுமாறாக ஓடி, ரோட்டோரம் இருந்த புளியமரத்தில் பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. கிட்டப்பாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராதாகிருஷ்ணன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். தகவலறிந்த ஆத்தூர் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிட்டப்பா பலியானதால், திருச்செந்தூர் மக்கள் சோகத்தில் உள்ளனர்.
அதிகாலை நேரம் என்பதால், தூக்க கலக்கத்தில் வண்டியை ஓட்டினாரா அல்லது காரில் ஏதாவது பிரச்சனையா என்று தெரியவில்லை. ஆனால் கார் புளிய மரத்தில் மோதியபோது காரில் இருந்த ஏர்பேக் விரிந்துள்ளது. இருந்தாலும், விபத்தில் கிட்டப்பா உயிரிழந்தது கடுமையான அதிர்ச்சியை தந்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications