காதலியுடன் நெருக்கமான போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்த காதலன்.. ஹோட்டல் மீது தாக்குதல்!
தூத்துக்குடி: காதலியின் அந்தரங்க படத்தை வெளியிட்டதால் ஆத்திரம் அடைந்து காதலனின் ஹோட்டல் மீது அந்த பெண்ணின் சகோதரன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பிரகாஷ் (26). பட்டதாரி. இவர் புதுரோடு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். அந்த பெண் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துள்ளார். தற்போது தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

முத்துப்பிரகாஷ்
5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வரும் நிலையில் முத்துப்பிரகாஷை பெண் கேட்டு தனது வீட்டுக்கு வருமாறு அந்த பெண் கூறியுள்ளார். அவர் சொன்னது போல் அந்த பெண்ணின் தந்தையிடம் பெண்ணை திருமணம் செய்து கொடுக்குமாறு முத்துப்பிரகாஷ் கேட்டுள்ளார்.

மாப்பிள்ளைக்கு புகைப்படங்கள்
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண்ணின் தந்தை ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அவசர அவசரமாக பெண் வீட்டாரும், அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்த்து நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்துள்ளனர். இதனிடையே அந்த மாப்பிள்ளைக்கு முத்துப்பிரகாஷ், தானும் காதலியும் நெருக்கமாக இருக்கும் படங்களை அந்த மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

திருமணம் நிறுத்தம்
இதனால் மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தை நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் முத்துப்பிரகாஷின் வீடு, ஹோட்டலில் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். காதலியின் சகோதரரான பேச்சிப்பாண்டி தனது ஆதரவாளர்களுடன் தாக்கியதாக முத்துப்பாண்டியும், அவரது தந்தையும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

கடும் தாக்குதல்
இந்த நிலையில் பெண் வீட்டார், தன் மீது கடும் தாக்குதல் நடத்தியதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என முத்துப்பிரகாஷ் ஆடியோ வெளியிட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த புகாரை அடுத்து பேச்சிப்பாண்டி உள்பட 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications