சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன்..பளார் என சத்தம்..வெடித்து சிதறிய செல்போன்..தூத்துக்குடியில் ஷாக்
தூத்துக்குடி: செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் அரசு அதிகாரி ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களையே தற்போது காண்பது அரிது என்று சொல்லும் அளவிற்கு அனைவர் கைகளிலும் செல்போன் தவழ தொடங்கியுள்ளது. செல்போன்களை எந்நேரமும் சிலர் பயன்படுத்திக் கொண்டு இருப்பதையும் காண முடிகிறது.

இன்னும் சிலரோ.. சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசிக் கொண்டு இருப்பது, கேம் விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். செல்போன்களை இப்படி பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என செல்போன் நிறுவனங்களும் எச்சரிக்கின்றன.
இந்த சூழலில் சமீப காலமாக செல்போன்கள் வெடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கேரளாவில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி செல்போன் வெடித்ததில் பலியானாள். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்படுவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே செல்போன் வெடித்ததில் அரசு அதிகாரி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-
திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். 40 வயதான இவர் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளராக திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை தனது உறவினரை பார்க்க ஆறுமுகநேரி சென்றார். அங்கு காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது சட்டைபையில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் திடீரென வெடித்து சிதறியது.
இதில் அவரது மார்பு மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த இசக்கியப்பனை உடனடியாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதால் அரசு அதிகாரி காயம் அடைந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications