நடுத்தெருவுக்கு வந்த ஜிபி முத்து.. ‛நா’ கூசும் வார்த்தைகளால் கோவில் பூசாரியுடன் சண்டை! ஆக்ரோஷம்
தூத்துக்குடி: சமூக வலைதளங்கள் மூலம் மிகவும் பிரபலமாகி ‛பிக்பாஸ்', ‛டாப் குக்கு டூப்' நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிபி முத்து நடுரோட்டில் கோவில் பூசாரியை ‛நா' கூசும் வார்த்தைகளால் ஆக்ரோஷமாக திட்டி சண்டையிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளமான டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் ஜிபி முத்து. டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட தொடங்கினார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளதால் இன்ஸ்டாகிராமிலும் ஏராளமான பாலோவர்ஸ்களை சம்பாதித்தார்.

இப்படி வலைதளங்களில் பிரபலமான ஜிபி முத்து விஜய் டிவியில் நடக்கும் ‛பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகு சன்டிவியில் நடக்கும் ‛டாப் குக்கு டூப்' நிகழ்ச்சியில் ஜிபிமுத்து பங்கேற்றார். திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தான் ஜிபி முத்து நடுரோட்டில் பூசாரியுடன் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதாவது ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். உடன்குடி அருகே வெங்கடாசலபுரத்தில் ஜிபி முத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த கிராமத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இது ஜிபி முத்து மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான கோவிலாகும். இந்த கோவிலுக்கு தூத்துக்குடியை சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். கோவில் கொடை விழா தவிர தமிழ் மாதத்தின் முதல் நாளில் இந்த கோவிலில் பூஜைகள் நடக்கும். இதில் ஜிபி முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்பது வழக்கம். அதேபோல் பூஜை செய்யும் மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் புரட்டாசி மாதம் பிறந்தது. புரட்டாசி முதல் தேதியான அன்று பிரம்மசக்தி அம்மன் கோவிலில் மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் வந்து பூஜை செய்தனர். அப்போது அங்கு வந்த ஜிபி முத்து கோவிலுக்கு பூஜை வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் ஜிபி முத்து மற்றும் மகேஷ் தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜிபி முத்து மற்றும் மகேஷ் தரப்பினர் நடுரோட்டில் வாக்குவாதம் செய்தனர். இந்த சமயத்தில் ஜபி முத்து தரக்குறைவான கெட்டவார்த்தைகளை ஆக்ரோஷமாக பேசி திட்டினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications