தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியலுக்கு வரலைன்னுதான் அஜித் கூறியுள்ளார்.. பாஜகவை எதிர்க்கலை.. எச் ராஜா அலேக் கருத்து!

Google Oneindia Tamil News

கோவில்பட்டி: அரசியலுக்கு வரவில்லை என்றுதானே அஜித்குமார் கூறியுள்ளார். மற்றபடி பாஜகவை எதிர்க்கவில்லையே என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். அந்த விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை, அஜித்தை பாராட்டி பேசியிருந்தார்.

இதையடுத்து தான் அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்றும் தன் மீதும் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசாதீர் என்றும் நேற்று அஜித்குமார் சுட சுட அறிக்கை வெளியிட்டார்.

ஓங்கி அடித்தாற் போல்

ஓங்கி அடித்தாற் போல்

ரஜினிக்கு ஆழம் பார்த்து அவர் மசியாததால் அஜித்துக்கு அவரது ரசிகர்களை வைத்து நூல் விட்டு பார்த்தார். ஆனால் அஜித்தோ எதற்கும் மசியாமல் தமிழிசை தலையில் ஓங்கி அடித்தாற் போல் அறிக்கை வெளியிட்டதாகவே மக்கள் கருதுகின்றனர்.

எச் ராஜா பேட்டி

எச் ராஜா பேட்டி

அஜித் குமாரை பாஜகவுக்கு அழைக்கவில்லையே என தமிழிசை பதிலடி கொடுத்தார். இந்நிலையில் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

கொடநாடு விவகாரம்

கொடநாடு விவகாரம்

அப்போது அவர் கூறுகையில் அரசியலுக்கு வரவில்லை என்றுதான் அஜித் கூறியுள்ளார். பாஜகவுக்கு எதிராக அஜித்குமார் பேசவில்லை. சாதிக் பாஷா விவகாரத்தை திசை திருப்பவே கொடநாடு விவகாரம் என்ற தகவல் வருகிறது.

எச் ராஜா

எச் ராஜா

தினகரனுடன் டீல் செய்து கொண்டு அதிமுக தலைமையை சங்கடப்படுத்த வேண்டும் என தம்பிதுரை பேசி வருகிறார் என்று எச் ராஜா தெரிவித்தார்.

English summary
BJP National Secretary H. Raja says that Ajith expressed that he is not willing to come to politics. He has not said anything about BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X