தமிழ்நாடு சங்கிகளின் பூமியாம்! சொல்றது யாருன்னு பாருங்க! ராகுல்காந்திக்கு சாபம் விட்ட அர்ஜுன் சம்பத்
தூத்துக்குடி: தமிழ்நாடு சங்கிகளின் பூமி என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியிருக்கிறார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
சாவர்க்கரை பற்றி பேசியதற்காக ராகுல்காந்தியின் வாய் அழுகிவிடும் என ஓபன் ஸ்டேஜில் நின்று கொண்டு அர்ஜுன் சம்பத் பகிரங்கமாக சாபம் விடுத்தார்.

இந்து மக்கள் கட்சி
சாவர்க்கரை பற்றி பேச ராகுல்காந்திக்கு எந்த தகுதியும் கிடையாது என்றும் சாவர்க்கரின் சீடர் தான் வ.உ.சிதம்பரனார் எனவும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். அதேபோல் வாஞ்சிநாதன் சாவர்க்கரின் வாரிசு என்றும், சாவர்க்கரின் படத்தை தனது வீட்டில் வைத்திருந்தவர் முத்துராமலிங்கத் தேவர் எனவும் அர்ஜுன் சம்பத் பேசினார். சாவர்க்கர் மன்னிப்பு கேட்டிருந்தால் முத்துராமலிங்கத் தேவர் அவர் படத்தை தனது வீட்டில் வைத்திருப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

பகிரங்கமாக சாபம்
ராகுல்காந்தியை இதுவரை தாம் சாபம் விடுத்ததில்லை என்றும் ஆனால் சாவர்க்கரை பற்றி பேசினால் ராகுல்காந்தியின் வாய் அழுகிவிடும் எனவும் ஓபன் ஸ்டேஜில் நின்று கொண்டு அர்ஜுன் சம்பத் பகிரங்கமாக சாபம் விடுத்தார். சாவர்க்கரை இழிவு படுத்தி பேசிய குற்றத்துக்காகவே ராகுல் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அதுவும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அர்ஜுன் சம்பத் பேசியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.பேரணி
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த தடை, இந்து மக்கள் கட்சி மாநாடுக்கு தடை என தொடர்ச்சியாக தடைகள் போடப்படுவதாகவும் கேட்டால் திராவிட ஆட்சி என்கிறார்கள் எனவும் அங்கலாய்த்த அர்ஜுன் சம்பத், தமிழ்நாடு சங்கிகளின் பூமி என ஒரே போடாக போட்டார். திமுக அமைச்சர்கள் மட்டுமின்றி அதிமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் பற்றியும் அண்ணாமலை பட்டியல் வெளியிடுவார் எனவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

திராவிடத்துக்கு மாற்று
திராவிடத்துக்கு மாற்றுத்தான் தாங்கள் என்றும் அர்ஜுன் சம்பத் பேசியிருக்கிறார். லஞ்சம் ஊழலுக்கு நெருப்பு போன்றவர் பிரதமர் மோடி எனக் கூறியிருக்கிறார். திராவிடத்துக்கு மாற்றுத்தான் தாங்கள் என்று அர்ஜுன் சம்பத் பேசியிருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications