கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்
தூத்துக்குடி அருகே கர்ப்பிணி மனைவியை கத்தியால் கணவன் குத்தி கொலை செய்தார்
Recommended Video
தூத்துக்குடி: கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி அருகேயுள்ள கிராமம் இ.சத்திரப்பட்டி. இங்கு வசித்து வந்த கொத்தனார் மாரியப்பனுக்கு கடந்த பிப்ரவரி மாதம்தான் கல்யாணமானது. மனைவி பெயர் சண்முகப்பிரியா. இப்போது இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.

நேற்று காலை மாரியப்பன் வீட்டு கதவு ரொம்ப நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரி அக்கம் பக்க நபர்களின் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது, மாரியப்பன், சண்முகப்பிரியா ரெண்டு பேருமே ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, மாரியப்பன் அரை மயக்கத்தில் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார்.
ஆனால், சண்முகப்பிரியா இறந்த நிலையில்தான் கிடந்தார். உடனடியாக போலீசார் மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அரை மயக்கத்தில் இருந்த மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண் விழித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சொன்னதாவது:
"என் மனைவி என்னை அடிக்கடி வேலைக்கு போ..ன்னு சொல்லிட்டே இருப்பாள். இப்பவும் அப்படித்தான் பிரச்சனை பண்ணினாள். அதனால், பழ வெட்டுற கத்தியால், அவளை குத்திவிட்டேன். இப்படி செய்துட்டதை நினைச்சு அழுதேன்.. அதுக்கப்புறம்தான் நானும் தற்கொலை செய்துக்கலாம்னு, என் கழுத்து, கைகளில் குத்தி கொண்டேன். ஆனால் மயங்கி விழுந்துட்டேன்" என்றார். போலீசார் இதுகுறித்த விசாரணையில் இறங்கி உள்ளனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications