புருவத்தை உயர வைத்த கந்த சஷ்டி விழா! விஜய்க்கு அரோகரா.. சாலை மறியல்.. இங்கேயும் நகை திருட்டு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார விழா நேற்று வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். ஆனால், இந்த விழாவைச் சுற்றி அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகளும் சலசலப்புகளும் இப்போது பேசுபொருளாகியுள்ளன. இதுகுறித்த செய்திகள்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களின் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" முழக்கத்துடன் நடைபெற்றது. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து ஆட்கொண்ட நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்களின் வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

Kandha Sashti Vijay Gold Theft

விஜய்க்கும் அமைச்சருக்கும் அரோகரா முழக்கம்

விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பாடல் குழுவினர் மற்றும் வர்ணனையாளர்கள் எழுப்பிய முழக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முருகப்பெருமானுக்கு அரோகரா என முழக்கமிட்டவர்கள், தமிழக முதல்வர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ் ஆகியோருக்கும் அரோகரா என முழக்கமிட்டிருக்கிறார்கள்.

இந்த செய்தி வெளியானதுமே, பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவிக்க துவங்கி விட்டார்கள்.. முருகப்பெருமானைப் போற்ற வேண்டிய புனிதமான அரோகரா கோஷத்தை அரசியல் தலைவர்களின் புகழ்பாட பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும், ஆன்மிகமும் அரசியலும் வெவ்வேறானவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இந்து முன்னணியும் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சருக்கு அரோகரா முழக்கமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சாலை மறியல்

இதனிடையே, சூரசம்ஹாரத்தைக் காண வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டது. லட்சக்கணக்கானோர் திரண்டதால், அவர்களின் வசதிக்காக 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன. ஆனாலும், விழா முடிந்து ஒரே நேரத்தில் பக்தர்கள் வெளியேறியதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தொடர்ந்து பஸ்கள் வராததால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கூடுதல் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

10 பவுன் நகை திருட்டு

இதே கந்த சஷ்டி விழா காலத்தில் இன்னொரு முருகன் கோயிலிலும் திருட்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள திருப்போரூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரத்தைக் காண வந்த செங்கல்பட்டைச் சேர்ந்த 55 வயது ஸ்ரீரங்கா என்ற பெண்ணுக்கு கூட்ட நெரிசலில் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது உதவி செய்வது போல் வந்த மர்ம நபர்கள், அந்த பெண் அணிந்திருந்த சுமார் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விழாவுக்கு வந்த இன்னொருவரின் செல்போனும் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார்களைப் பெற்ற போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரே விழாவை சுற்றி இத்தனை சலசலப்புகளா?

முருகப்பெருமானின் சூரசம்ஹாரம் பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆனால், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் பெயரில் எழுந்த அரோகரா முழக்கம், அதற்கு அரசியல் கட்சியினர் தெரிவித்த கண்டனம், சொந்த ஊர் திரும்ப முடியாமல் பக்தர்கள் நடத்திய சாலை மறியல் என திருச்செந்தூர் விழா பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, திருப்போரூரில் நடந்த நகை திருட்டு சம்பவமும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+