கனிமொழியின் "கனிந்த" கரிசனம்.. நடுரோட்டில காரை நிறுத்தி.. கிட்டபோய் பார்த்தால்.. திணறிய தூத்துக்குடி
தூத்துக்குடி: கனிமொழி எம்பி-யின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்டு தூத்துக்குடி தொகுதி மக்கள், நெகிழ்ந்து போயிருக்கிறார்கள்.. என்ன நடக்கிறது தொகுதியில்?
கடந்த 2019-ல் நடந்த எம்பி தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்றிருந்தார்.. ஆனால், இந்த தேர்தலில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், கனிமொழி வேட்பு மனுவில் கணவர் அரவிந்தனின் பான்கார்டு எண் குறிப்பிடவில்லை, அதனால் கனிமொழி வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
கனிமொழி: இந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கனிமொழியின் இந்த மனுவை தள்ளுபடியும் செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கனிமொழி மேல்முறையீடு செய்தார். கனிமொழி மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம்கோர்ட், அவரது வெற்றிக்கு எதிரான மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது... இதெல்லாம் எதற்காகவென்றால், அன்று முதல் இன்றுவரை கனிமொழியின் வெற்றியும், தாக்கமும், தொகுதியை வலுவாக்கி வைத்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் சூடு பிடித்தபோதே, அங்கு நடந்த பல கூட்டங்களில் பங்கேற்று மாவட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தவர் கனிமொழி.. அத்துடன், அங்கிருக்கும் தொழிலதிபர்கள், நாடார் சங்கங்கள் என பல தரப்பினரையும் நேரில் சந்தித்து இதுகுறித்து விவாதித்தபடியே இருந்தவர்.. ஸ்ரீவெங்கடேசுவரபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட எண்ணற்ற பணிகளை செய்து தந்திருப்பவர..
முதன்மையானவர்: தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை, உரிய நேரத்தில் நிறைவேற்றி தந்திருப்பவர்.. பொள்ளாச்சி மற்றும் சாத்தான்குளம் விஷயங்களை கையில் எடுத்து போராடியவர்களில் முதன்மையானவராகவும் கனிமொழி திகழ்ந்திருக்கிறார்.. இந்த போராட்டங்களையெல்லாம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளோடு மட்டுமே பொருத்தி பார்க்கப்படவில்லை.. மாறாக, தென்மண்டலங்களில் திமுகவின் பலத்தை கூட்ட காரணமாக இவை இருந்திருக்கின்றன..
கூடுதல் பதவி: அதனால்தான், தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை கனிமொழிக்கு தரும்படி 2 வருடங்களுக்கு முன்பேயே அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி கேட்டார்கள்.. சட்டசபை தேர்தலுக்கு முன்பே கனிமொழிக்கு இந்த பதவியை தந்தால், அது திமுகவுக்கு கூடுதல் பலத்தை உருவாக்கும், அமமுக, அதிமுகவின் செல்வாக்கை எளிதாக குறைத்து விடலாம் என்றும் வலியுறுத்தினார்கள்..
அன்று கருணாநிதி இருந்தபோது அழகிரி எப்படி செயல்பட்டாரோ, அதுபோலவே தென்மண்டலத்தை தன் வசம் கனிமொழி கொண்டுவந்துவிடுவார் என்று வலியுறுத்தியபடியே வந்தனர் என்பதை மறுக்க முடியாது. அந்த அளவுக்கு கனிமொழியின் செல்வாக்கும், செயல்பாடுகளும் மிகுந்த கவனத்தை கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஏற்படுத்தியபடியே உள்ளது.. இதோ இப்போதுகூட கனிமொழியின் அணுகுமுறையானது மக்களை ஈர்த்து வருகிறது.
தண்ணீர் பந்தல்கள்: தற்போது கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி சார்பில் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது...
எனினும், வழக்கத்தை விட இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், பொதுமக்கள் வெயிலை சமாளிப்பதற்கும், அவர்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் மடக்கு குடைகளை, எம்பி கனிமொழி சார்பாக முன்னாள் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் கஸ்தூரி தங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
திடீர் சந்தோஷம்: அதேபோல தூத்துக்குடியில் நேற்றைய தினம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, கனிமொழி காரில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது செல்லும் வழியெல்லாம், வெயிலில் நடந்து சென்ற மக்களுக்கு அருகே காரை நிறுத்தி, அவர்களுக்கு குடையை எடுத்து தந்து திடீர் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்... மேலும், மக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்..
வெயில் அதிகமாக இருக்கிறது.. வெளியே செல்லும்போது, மறக்காமல் குடைகளை எடுத்து செல்லுங்கள்.. நிறைய தண்ணீர் குடியுங்கள்.. எப்போதுமே உடல் நீர் இழக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.. முடிந்தவரையில் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருங்கள் என்று, தன் தொகுதி மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
கனிந்த மனம்: கனிமொழி உள்ளிட்ட திமுகவினரின் இந்த குடை வழங்கல் மக்களிடையே மன நிறைவை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. திடீரென காரை நிறுத்தி தங்களிடம் பேசுவதையும், அக்கறையுடன் குடை வழங்குவதையும் கண்டு தொகுதி மக்கள் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.. கனிமொழியின் கனிந்த அன்பிலும், கரைந்து கொண்டிருக்கிறார்கள்..!!
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications