Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண் பிள்ளைகளிடம் பெண்களை தவறாக பார்க்கக் கூடாதுன்னு சொல்லி வளர்க்கணும்! கனிமொழி எம்.பி. அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஆண் பிள்ளைகளிடம் பெண்களை தவறாக பார்க்கக் கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும் என கனிமொழி எம்.பி. அட்வைஸ் அளித்துள்ளார்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில்,தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் (NCSRC) மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் "Cyber Crime against Women on Social Media" சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

 Kanimozhi MP advice Boys should be taught not to mistreat women

அதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;

''நாம் பெண்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டியவர்கள் அப்படிச் சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். நம்ம உடலைப் பார்த்து, நாம் வெட்கப்படவேண்டும், முழுதாக ஆடை அணிந்து வெளியே வரவேண்டும். ஆண்கள் பெண்களைத் தவறாகப் பார்ப்பதற்குப் பெண்கள் தான் பொறுப்பு என்று சொல்லி வளர்ப்பார்கள்.''

''தனக்குப் பிடித்த உடை அணிந்து பெண்கள் கல்லூரிக்குப் போகமுடியாது. மற்றவர்கள் கண்களுக்கு உறுத்தக்கூடாது என்று தான் உடை அணிய சொல்வார்கள். அந்த பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்ப்பதில்லை. நீ எந்த பெண்ணையும் தவறாகப் பார்க்கக்கூடிய உரிமை உனக்கு கிடையாது. அதைச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை.''

''நீ (பெண்கள்) பத்திரமாக இரு, நீ இப்படி ஆடை அணி, நீ இப்படி இரு, நீ வெளியில் போகாத, இந்த தடைகளை உடைத்திடவேண்டிய காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். சாதிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். சில தடைகள் வரும், இந்த மாதிரி டெக்னாலஜி மூணாற்றித்தினால். வீட்டுக்கு உள்ள இருக்கும் பெண்களுக்கு ஆபத்து வருகிறது. எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அந்த பிரச்சனைகளால், நாம் முடங்கி விடக்கூடாது.''

 Kanimozhi MP advice Boys should be taught not to mistreat women

''நாம் பிறக்கும் பொது நம்மோடு பிறந்தது இந்த உடல். அதை வைத்த,யாரும் நம்மைக் கொச்சைப் படுத்த அனுமதிக்கக்கூடாது (I will accept my body and it is) அந்த சக்தி நமக்கு இருக்கவேண்டும். சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு யாரும் லைக் பண்ண மாட்டார்கள் என்று வருத்தப்படக்கூடாது. You learn to appreciate yourself; you learn to respect yourself, that is the basic and most important thing. Nobody has the Rights to tell you, how you should do. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.''

''நான் ஒரு பெண் இப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறேன், என்னை இப்படித்தான் உருவாக்கியிருக்கிறது. அந்தப் பெருமிதமும், திமிரும் இங்க இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும். அதை வைத்துக்கொண்டு, யாரும் உங்களை மிரட்டவோ உருட்டவோ அனுமதிக்கக்கூடாது. நீங்கள் உயிரோடு இருக்கும் வரை தான் வாழ்க்கை. எந்த பிரச்சினையாக இருந்தாலும், உங்களை மதிப்பீடு செய்ய யாருக்கும் உரிமை இல்லை. Nobody has a Rights to Judge You.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+