இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்! டன் கணக்கில் அரிசி-பால் பவுடர்-மருந்துகளுடன் புறப்பட்ட 3-வது கப்பல்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 16 ஆயிரத்து 800 டன் அளவிலான நிவாரணப் பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்துள்ளார் கனிமொழி எம்.பி.
தமிழகத்திலிருந்து 16,500 டன் அரிசி, 250 டன் ஆவின் பால் பவுடர், 50 டன் மருந்துகளுடன் 3-வது கப்பல் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு;

நிவாரணப் பொருட்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் கடந்த மே மாதம் 18-ந்தேதி முதல் கட்டமாக ரூ.30 கோடி மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

3-வது கப்பல்
இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாகக் கடந்த மாதம் 22 ந் தேதி அன்று தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் ரூ.67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் இன்று தொடர்ந்து 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் இன்று தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

டன் கணக்கில்
ரூ.54 கோடி மதிப்பிலான 16,500 டன் அரிசி, ரூ.6 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.14 கோடி மதிப்பிலான 50 டன் உயிர் காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ.74 கோடி மதிப்பிலான 16,800 டன் எடையுள்ள பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டு தயாராக இருந்தது. இதனை தொடர்ந்து நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு கொழும்பு துறைமுகத்துக்கு புறபட்டு சென்றது. இந்த கப்பலை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

அமைச்சர்கள் 3 பேர்
இந்த நிகழ்வில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications