அண்ணாமலை பாஜகவை கண்டிச்சாரா? ஆச்சரியமா இருக்கே! தவெகவினரின் லட்சணம் இது தான்! கனிமொழி காட்டம்!
தூத்துக்குடி: தமிழக வெற்றி கழகத்தினர் மேயர் பிரியா மற்றும் தவெகவினருக்கு எதிராக செயல்படக் கூடிய பெண்கள் மீது தொடர்ந்து சமூக வலைதளத்தில் தரக்குறைவான பதிவுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் பெண்களை மதிக்க கூடிய பாதுகாக்க கூடிய லட்சணமா? எனவும், காக்ரோச் பார்ட்டி தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது நல்ல முன்னேற்றம் என திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடிக்கு வருகை தந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பருவமழை தொடர்பாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய தமிழக வெற்றி கழக அரசு எந்தவித ஏற்பாடுகளையும் செய்ததாக தெரியவில்லை.

பல இடங்களில் சிறிய அளவு மழைக்கு சென்னை போன்ற இடங்களில் தண்ணீர் தேங்குவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் தூத்துக்குடியில் மழை வந்தால் அடிக்கடி தண்ணீர் தேங்க கூடிய பிரச்சனை இருக்கக்கூடிய இடம்.
கடல் மட்டத்தை விட கீழே இருக்கக்கூடிய நகரமாக இருப்பதால் இங்கே கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது. அதனால் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி உடன் சென்று அந்தப் பணிகளை பார்வையிட உள்ளேன் .
எங்களால் முடிந்த பணிகளை செய்கிறோம் அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அதற்காக எதிர்வினை கண்டிப்பாக இருக்கும். காக்ரோச் பார்ட்டிகள் மீதான தாக்குதலுக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக உள்ளது. நல்ல முன்னேற்றம்.
மற்றவர்கள் பெண்களை தரகுறைவாக பேசுகிறார்கள் அப்படி என்று சொல்லி தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய ஒரு அரசு ஒரு கட்சியின் மேயர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பெண்களாக இருக்கட்டும். தவெகவினரை எதிர்த்து பேசக்கூடிய சமூக வலைதளங்களில் செயல்படக்கூடிய பெண்கள் மற்ற இயக்கங்களை சார்ந்த பெண்களை மிக இழிவாக பேசி வருகின்றனர்.
நேற்று கூட தாராபுரத்தை போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா அவர்களை கைது செய்து இருக்கிறார்கள். தனக்கு எதிராக பதிவுகள் செய்யக்கூடிய, தனக்கு எதிராக பணியாற்ற கூடிய எல்லா பெண்கள் மீதும் மிக தரக்குறைவாக பதிவுகளை அவர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் பெண்களை மதிக்க கூடிய.. பாதுகாக்க கூடிய லட்சணமா?" என்றார்.


Click it and Unblock the Notifications
