அய்யா கருப்பனே வாருமய்யா.. திருச்செந்தூர் கடலில் கிடைத்த பொக்கிஷம்! கம்பீரமாக நின்ற கருப்பசாமி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் அருகே கடல் தொடர்ந்து இரண்டாவது நாளாக உள் வாங்கி காணப்பகிறது. திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் சுமார் 100 அடி உள்வாங்கியதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. இந்நிலையில், கரையில் இருந்து 50 அடிக்கு உள்வாங்கிய கடல் பச்சைநிற பாசிகளுடன் ஒரு அடி உயரம் கொண்ட கருப்பசாமி சிலை தென்பட்டுள்ளது. இதுபோல் ஏராளமான சிலைகள் கரை ஒதுங்குவதால் இடையூறு இல்லாமல் சிலைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானுக்கு தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகள் உள்ளது. இந்த கோவில்கள் மலைமேல் அமைந்துள்ள நிலையில், கடலோரம் உள்ளது திருசெந்தூர் கோவில் மட்டுமே.

tiruchendur murugan temple spirituality

திருச்சீரலைவாய் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்ட திருசெந்தூரில் முருகப் பெருமான் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியாய் காட்சி தருகிறார். இந்த கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூர்

மேலும், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு. கடந்த பல ஆண்டுகளாகவே திருசெந்தூர் முருகப் பெருமானின் புகழ் பரவ பரவ, கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தலையா? கடல் அலையா என தெரியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருச்செந்தூர் நோக்கி அணி அணியாக செல்வார்கள்.

முருகப்பெருமான்

அதிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர். அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம். இந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடற்கரையில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.

கடலில் சீற்றம்

அந்த வகையில், கோவில் முன்புள்ள கடற்கரையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை கடல் அவ்வப்போது உள்வாங்கி காணப்படும். ஆனால் கடந்த 6 மாத காலமாக கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் கடலில் சுமார் 50 அடிக்கு கடல் அரிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டது.

உள்வாங்கிய கடல்

தற்போது கடல் அரிப்புகள் சீராகி வருகிறது. இந்நிலையில், 6 மாத காலத்திற்கு பிறகு கடந்த வாரம் கடல் உள்வாங்கியது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக மீண்டும் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. நேற்று அமாவாசை தினம் என்பதால் கடல் உள்வாங்கி காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கோவில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் 80 அடி உள்வாங்கி காணப்படுகிறது.

கருப்பசாமி சிலை

கடல் உள்வாங்கிய காரணத்தினால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பச்சை பாசிகள் படிந்த பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். கோவில் கரையில் இருந்து 50 அடிக்கு உள்வாங்கிய கடல் பச்சைநிற பாசிகளுடன் ஒரு அடி உயரம் கொண்ட கருப்பசாமி சிலை தென்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்செந்தூர் கடலில் இருந்து ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த சிலையையும் மீட்டு பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மீட்கப்படும் சிலைகளை கோவில் அமைத்து பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர் மக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+