கொடூரமாகக் கொ*ப்பட்ட கவின்..வழக்கிலிருந்து தப்பிய சுர்ஜித் பெற்றோர்! போராட்டத்தில் குதித்த குடும்பம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, கவினின் பெற்றோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் , கடந்த மாதம் 27-ம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோரை நெல்லை மாநகர போலீசார் கைது செய்தனர்.

Kavin Selva Ganesh Murder Case

பின்னர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர் இதே வழக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பு ஆய்வாளரான சுர்ஜித்தின் தாய் கிருஷ்ண குமாரி, உறவினர் ஜெயபால் ஆகியோரும் கைதாகினர்.

சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென சரவணன், கிருஷ்ண குமாரி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சரவணன், கிருஷ்ண குமாரி மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ள கவினின் வீட்டின் முன்பு, அவரது தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் தமிழ்ச்செல்வி, கவினின் புகைப்படத்தை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கவின் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், தங்களது மகன் கவினுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கவினின் பெற்றோர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு மேல்முறையீடு செய்து, வழக்கில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இவ்வளவு நாட்களாக நாங்கள் போராடியது எதற்காக? போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படியானால், எங்களுக்கான நீதி எங்கே?

என் பிள்ளையை ஒரு பெண்ணை விரும்பியதற்காக இப்படி கொலை செய்ய வேண்டுமா? இது நியாயமா? ஒரு தாயாக என் மகனை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்பது எனக்குத்தான் தெரியும். இனி இதுபோன்ற சம்பவத்தில் மற்றொரு கவின் பலியாகக் கூடாது. ஆதாரங்கள் இல்லை என்றால் ஆரம்பத்தில் கைது நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது? சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் ஆதாரங்களை சேகரித்து விசாரணையைத் தொடர வாய்ப்பு வழங்க வேண்டும்.

விசாரணை முழுமையாக நடைபெறாமல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு விளக்கம் வேண்டும். வழக்கில் தொடர்புடையவர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருப்பதால், அவர்களின் பங்கு குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வழக்கில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக தாங்கள் கருதும் சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்து, வழக்கில் தேவையான மேலதிக விசாரணை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை வெளிவந்து என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். ஒரு கவினை இழந்துவிட்டோம். இனி மற்றொரு கவின் இதுபோன்ற சம்பவத்தில் உயிரிழக்கக் கூடாது. என் மகனுக்கு நடந்தது இதோடு முடிய வேண்டும். உண்மை வெளிவந்து உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+