நிலத்தை அளக்காத சர்வேயர்.. தூத்துக்குடி கோர்ட் ஒரே போடு.. நில அளவீடு விஷயத்தில் இவ்வளவு இருக்கா?
தூத்துக்குடி: நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என்பதற்காக, தாசில்தார், சர்வேயரை நாடியும்கூட பலன் கிடைக்கவில்லை.. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவை சேர்ந்தவர் மாரியம்மாள்.. இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 65 செண்ட் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க கயத்தாறு தாசில்தார் மற்றும் சர்வேயர் ஆகியோரை அணுகியிருக்கிறார்..

இதற்கான பணத்தையும் செலுத்தி விண்ணப்பித்திருக்கிறார்.. ஆனால் இவரது நிலத்தை அளவீடு செய்ய சர்வேயர் யாருமே வரவில்லை.. இதனால், பல முறை நேரில் சந்தித்தும்கூட இது சம்பந்தமான நடவடிக்கையை எடுக்கவில்லையாம்.
மன உளைச்சல்: எனவே, மன உளைச்சலுக்கு ஆளான மாரியம்மாள், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.. ஆனால் நோட்டீஸ் அனுப்பியும்கூட, உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லையாம். எனவே, தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார் மாரியம்மாள்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் இந்த வழக்கு குறித்து விசாரித்தனர்.. பின்னர் தங்கள் தீர்ப்பில் சொன்னபோது:
ஆவணங்கள்: "தாசில்தார் மற்றும் சர்வேயர் தபசில் உள்ள சொத்தை 4 மால் அளந்து அதற்குரிய ஆவணங்களை வழங்க வேண்டும். மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.20,000 ஐ 2மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு தொடர்ந்த நாள் முதல் 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
எப்போதுமே அதிகாரிகளை வைத்தே நிலத்தினை அளக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலும் உங்களுடைய நிலத்தை அளந்து பார்க்கலாம்.. இதற்கு முதலில் உங்களது நிலம் எத்தனை சதுர அடியில் உள்ளது? அதன் நிலத்தின் வடிவம் சதுரமாக உள்ளதா? செவ்வகமாக உள்ளதா? வெவ்வேறு கோணங்களில் உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.
நில அளவீடு: ஒரு இன்ச்டேப்பிலேயே நிலத்தை அளக்கலாம். டேப்பின் மேலே அடி கணக்கும், இன்ச்சும் கீழே சென்ட்டி மீட்டரில் காணப்படும். இதில், ஒரு அடி என்பது 12 இன்ச்சு, 30.48 சென்டி மீட்டர் சேர்ந்ததாகும். மீட்டர் கணக்காக இருந்தால் டேப்பில் 1 மீட்டருக்கு 3,28 அடியாகும். 1 ஏக்கர் இருந்தால் 100 சென்ட்டும், 100 சென்ட் என்பது 43560 சதுர அடியும் வரும்.. இதனை சதுரமீட்டரில் 4048 என்றும் சொல்லலாம்.. இதனை பயன்படுத்தியே நிலத்தை அளந்து கொள்ளலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications