திருச்செந்தூரில் நடந்த ஆச்சரியம்! கடலோரத்தில் திடீர்னு எழுந்து நின்ற "லிங்கம்".. சிலிர்த்த பக்தர்கள்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், அன்றைய காலங்களில் புதைந்துபோன கற்சிலைகள் மேலெழுந்து வருகின்றன.. அந்தவகையில் "சிவலிங்கம்" எழுந்து வருவதை பார்த்து பக்தர்களுக்கு புல்லரித்துவிட்டது. என்ன நடந்தது?
உலக அளவில் புகழ்பெற்றது திருச்செந்தூர் கோயில்.. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது, கடற்கரைக்கு அருகில் அமைந்திருக்கிறது.. விஷேச, விரத, விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு திரண்டு வருவார்கள்.

அப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோயிலை ஒட்டியுள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.. இங்குள்ள கோவில் கடற்கரை பகுதியில் சமீபகாலமாகவே கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்களுக்கு அச்சம் ஏற்பட்டு வருகிறது.
கல்வெட்டுகள்: இந்நிலையில், இந்த கடல் அரிப்பு காரணமாக வரலாற்று பொக்கிஷங்களும் திருச்செந்தூரின் கடலோரங்களில் கிடைத்து வருகின்றன.. அந்தவகையில், கடந்த மாதம் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகளும், 4 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டும் தென்பட்டது. 100 வருடங்களுக்குட்பட்ட இந்த கல்வெட்டுகளில், நல்ல தண்ணீர் கிடைக்கும் " தீர்த்த கிணறுகள்" என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.
பிறகு கடந்த வாரம், திருச்செந்தூர் கடல் மண்ணில் 200 வருட பழமை வாய்ந்த முனிவர் சிலையானது, மண்ணிலிருந்து வெளியே வந்தது.. 2 கைகளிலும் ருத்ராட்சம் கட்டப்பட்ட அந்த முனிவரின் சிலைக்கு பக்கத்திலேயே, பெண் உருவம் கொண்ட ஒரு அடி உயரமுள்ள நாகர் சிலையும் கிடைத்தது.
அச்சு அசல் சிங்கம்: இந்நிலையில், 200 ஆண்டுகள் பழமையான கல் ஒன்று கரை ஒதுங்கியிருக்கிறது.. பார்ப்பதற்கு அச்சு அசல் சிங்கத்தின் உடல்போலவே இருக்கிறதாம். ஆனால், முகம் மட்டும் உருவத்தில் இருக்கிறது. இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள்.. பெரும்பாலும், பழமையான கோவில்களில், கற்களில் இப்படியான சிங்க உடலும், யாளியின் முகமும் பொறிக்கப்படுவது வழக்கமாம். அந்தவகையில்தான் இந்த கல்லும் மண்ணை துளைத்து வெளியே வந்துள்ளது.
யாளி என்பது, பழங்கால இந்து கதைகளில் வரக்கூடிய சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்... ஆனால், யானையையும் விட வலிமையானதாம்.. பெரும்பாலான கோயில்கள் இந்த யாளி காணப்படும்..
புதைந்த யாளி: முற்காலத்தில் திருச்செந்தூர் கோயிலுக்கு முகப்பிலுள்ள கற்களில் யாளி இருந்திருக்கலாம் என்றும், திருச்செந்தூர் கோவில் சீரமைப்பு பணிகளின்போது, இந்த கல் அகற்றப்பட்டு கடற்கரை பகுதியில் மூழ்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.. கடல் அரிப்பு தற்போது ஏற்பட்டு வருவதால், கீழே புதைந்து போன யாளி தற்போது மீண்டும் வெளியே வந்திருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால், அந்த யாளியின் கல்சிலை உடைக்கப்பட்டு, அதன் ஒரு கல் பாதம் மட்டும், கடலில் வீசப்பட்டுள்ளது. அது தற்போது மேலேழுந்து வரும்போது, பார்ப்பதற்கு அப்படியே சிவலிங்கம் போலவே காட்சியளிக்கிறதாம்.
கற்சிலைகள்: இன்னும் இப்படி ஏராளமான கற்சிலைகள் திருச்செந்தூர் கடற்கரையில் வெளியே வர துவங்கி உள்ளன.. ஒவ்வொரு சிலைகளையும் பார்க்கும்போது, பக்தர்கள் மெய்சிலிர்த்து பரவசம் அடைகிறார்கள்.. இதுபோன்ற பழங்கால பொக்கிஷங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்களும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications