ஃபுல் மப்பு.. மனைவியுடன் சண்டை.. பைக்குக்கு தீ.. லுங்கியுடன் சுற்றி சுற்றி வந்ததால் பரபரப்பு!
பைக்குக்கு தீ வைத்த நபரின் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
தூத்துக்குடி: வீட்ல பொண்டாட்டியுடன் சண்டை.. ஃபுல்மப்பில் நடுரோட்டுக்கு வந்த கணவன்.. பைக்கை தீ வைத்து கொளுத்தி விட்டு, வெறும் லுங்கியுடன் பைக்கையே சுற்றி சுற்றி வந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமயில். பிளம்பிக் வேலை பார்க்கிறார். குடிப்பழக்கம் இவருக்கு உள்ளது. வழக்கமாக வீட்டு செலவுக்கு பணம் தருபவர் 2 நாளாக தரவில்லை.
இதைபற்றி வேலுமயில் மனைவி கேட்டதற்கு, ஹெல்மட் போடாம பைக்கில் வந்தேன்.. அப்போ என்னை போலீஸ்காரங்க வழி மறிச்சுஃபைன் போட்டுட்டாங்க. என்கிட்ட இப்போ பணம் இல்லை" என்றார்.

வேலுமயில்
"குடிச்சிட்டு வண்டி ஓட்டினா இப்படிதானே நடக்கும்? வேலைவெட்டிக்கு போகாத உனக்கு பைக் எதுக்கு? " என்று கேட்டுள்ளார். இதை கேட்டதும் போதையில் இருந்த வேலுமயிலுக்கு கோபம் வந்துவிட்டது. அதனால், வீட்டிலிருந்து பைக் எடுத்து கொண்டு தாமோதரநகர் ஜங்ஷனுக்கு வந்தார்.

பைக்
அந்த ஜங்ஷனில் பைக்கை நிறுத்திவிட்டு, இந்த பைக் இருக்க போயிதானே எல்லாரும் ஃபைன் போடுறீங்க.. இது இல்லேன்னா என்ன பண்ணுவீங்க" என்று கேட்டு கொண்டே தன் சட்டையை கழற்றி அந்த பைக்கில் உள்ள பெட்ரோலில் நனைத்து தீ வைத்து பற்ற வைத்துவிட்டார்.

ஹெல்மட்
இதை பார்த்து அந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். "ஏன் கொளுத்தனீங்க" என்று அங்கிருந்தோர் கேட்கவும், ஹெல்மெட் போடலைன்னு ஃபைன் போட்டாங்க என்று உளறி கொண்டே அங்கேயே சுற்றி சுற்றி வந்தார். தகவலறிந்து வந்த தென்பாகம் போலீசார் தண்ணீரை ஊற்றி பைக் தீயை அணைத்தனர்.

தகராறு
இந்த பைக் எரிவதை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து இணையத்தில் போட்டுவிட்டனர். இதனால் போலீசார் ஃபைன் போட்டதால்தான் பைக்கை வேலுமயில் கொளுத்தியதாக தகவல்கள் பரவின. உண்மை காரணம் போலீசார் இல்லை.. இதுகுடும்ப தகராறுதான் என்பதும், வேலுமயில் போதையில்தான் இதை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நடுரோட்டில் பைக்கை கொளுத்திவிட்டு, லுங்கியுடன் அதனையே சுற்றிசுற்றி வந்த வேலுமயிலின் இந்த வீடியோதான் வைரலாகிறது.
-
பெங்களூரு மஞ்சு வீட்டு கிச்சனில் திடீர்னு வினோத சத்தம். எட்டிப் பார்த்தால் "அது" அசையாமல் கிடந்ததாம் -
குற்றம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு.. தமிழகத்தை உலுக்கிய விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. டைம் லைன் -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications