சந்தேக புத்தியால் மதி கெட்டுப்போன மதிகுமார்.. மனைவியை அடித்துக்கொன்று விட்டு எடுத்த விபரீத முடிவு
தூத்துக்குடி: குடும்பத்தகராறுகள் இப்போது கொலையில் முடிந்து விடுகின்றன. புத்தி கெட்டுப்போனதால் சந்தேகம் ஏற்பட்டு 25 ஆண்டுகள் கூட வாழ்ந்த மனைவியையே அடித்துக்கொன்று விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் ஒருவர். தூத்துக்குடியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த தம்பதியரின் பெயர் மதிகுமார், அமுதா என்பதாகும். தூத்துக்குடியை அடுத்த தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன்தான் மதிகுமார். அமுதாவுடன் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த தம்பதியருக்கு அஜித்குமார், அஜீஸ்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அஜித்குமாருக்கு திருமணமாகி விட்டது குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். அஜிஸ்குமார் பெற்றோருடன் தங்கி இருந்து தூத்துக்குடி அருகே உள்ள காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

திருமணமாகி வெள்ளி விழா கொண்டாடிய நிலையிலும் மதிகுமாருக்கும் அமுதாவிற்கும் அடிக்கடி சண்டை வருமாம், அமுதாவை சந்தேகப்பட்டு அடிப்பாராம். நேற்று இரவு மகன் வேலைக்கு சென்ற பின்னர் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. நள்ளிரவில் மனைவியை கொடூரமாக தாக்கினார் மதிகுமார். இதில் கீழே சுருண்டு விழுந்து அமுதா உயிரிழந்தார்.
அமுதாவின் மரணம் மதிகுமாரின் மரமண்டைக்கு உரைக்கவே பயந்து போனார். மதி கெட்டுப்போயிருந்த நிலையில் அமுதாவின் சேலையை உத்தரத்தில் மாட்டி தூக்கில் தொங்கினார். காலையில் வெகு நேரமாகியும் மதிகுமாரின் வீடு திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு போய் பார்த்தனர்.
அமுதாவும் மதிகுமாரும் சடலமாகக் கிடந்ததைப் பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அமுதா கழுத்தில் காயத்துடன் இருந்தைப் பார்த்து அஜிஸ்குமார் அலறி துடித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 25 ஆண்டுகாலம் தம்பதியராக வாழ்ந்த இருவரின் மரணம் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
Madurai Murder: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் கொடூர கொலை.. நள்ளிரவில் நடுங்கும் சம்பவம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications