2 நாள் என்னை.. உடம்பெல்லாம்.. ரத்த காயத்துடன்.. கதறி ஓடிய கலைச்செல்வி.. தூத்துக்குடியில் கொடுமை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: "2 நாள் என்னை அனுபவிச்சான்.. அதுக்கப்பறம் என் உடம்பெல்லாம்" என்று சொல்லும்போதே கதறி அழுகிறார் கலைச்செல்வி... காதலனை நம்பி சென்றதால், அடித்து உதைத்து.. உடம்பெல்லாம் சிகரெட் சூடு வைத்து.. தலைமுடியை வெட்டி.. ரத்த காயத்தோடு அங்கிருந்த தப்பித்து ஓடிவந்துள்ளார் இந்த இளம்பெண்!

திருச்செந்தூர் அருகே உள்ள பகுதி செட்டியாபம்.. இங்கு வசித்து வந்த தம்பதி சக்திவேல் - வசந்தா.. இவர்களின் மகள் கலைச்செல்வி! 17 வயது சிறுமி!!

சக்திவேல் எந்த வேலை வெட்டிக்கும் போவது இல்லை.. தண்ணி அடிக்கும் பழக்கமும் உள்ளது.. அதனால் வசந்தாதான் திருப்பூரில் வேலை செய்துகுடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

கலைச்செல்வி

கலைச்செல்வி

கலைச்செல்வியும் சென்றுவிட, சக்திவேலுவும், கலைச்செல்வியும் மட்டும் ஊரில் இருந்துள்ளனர்.. ஆனால் குடும்ப செலவுக்காக கலைச்செல்வியும் ஒரு செல்போன் கடையில் வேலைக்கு சென்றார்.. அப்போதுதான் அய்யப்பன் என்ற இளைஞருடன் பழக்கமாகி.. அது காதலானது!

தாயின் பிரிவு

தாயின் பிரிவு

ஒரு பக்கம் தாயின் பிரிவு.. இன்னொரு பக்கம் எந்நேரமும் போதையில் இருக்கும் அப்பா.. இவர்களுக்கு இடையில் வந்த அய்யப்பனை பெரிதும் நம்பினார் கலைச்செல்வி.. திருப்பூரில் உள்ள அம்மா பார்க்க ஆசையாக உள்ளது என்று கலைச்செல்வி ஒருநாள் சொல்லவும்.. அழைத்து செல்வதாக அய்யப்பனும் சொல்லி உள்ளார்.

சிகரெட் சூடு

சிகரெட் சூடு

இந்நிலையில், போன சனிக்கிழமை விடிகாலை கலைச்செல்வி அதே பகுதியில் உயிருக்கு போராடியபடி விழுந்து கிடந்தார்.. அவரது உடம்பெல்லாம் சிகரெட் சூடு இருந்தது.. கை, கால்கள், முகமெல்லாம் அடித்து வீங்கிப்போய்.. ரத்தகாயங்களுடன் கிடந்தன.. அதை பார்த்து பதறிய பொதுமக்கள் கலைச்செல்வியை ஆபத்தான நிலையில் மீட்டு உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிகிச்சை

சிகிச்சை

முதல்கட்ட சிகிச்சைக்கு பிறகுதான் கலைச்செல்விக்கு நினைவு திரும்பியது.. ஓரளவு பேசவும் முடிந்தது.. அப்போது போலீசாரிடம் அவர் சொன்னதாவது: "எனக்கு என் அம்மாவை பார்க்கணும்போல இருந்தது.. அதனால திருப்பூருக்கு என்னை கூட்டிட்டு போக அய்யப்பனிடம் சொன்னேன்.. சரின்னு சொன்னான்.. ஆனா திருச்செந்தூருக்கு கூட்டிட்டு போய் ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து.. என்னை 2 நாள் அனுபவிச்சான்.

மணிகண்டன்

மணிகண்டன்

அதுக்கப்புறம் அவன் பிரண்ட் மணிகண்டனுக்கும் என்னை விருந்தாக்கினான்... இதுக்கு நான் மறுப்பு சொன்னதுக்கு, என் உடம்பெல்லாம் சிகரெட்டால் 2 பேரும் சூடு வெச்சிட்டாங்க.. அடிச்சு உதைச்சு சித்ரவதை செஞ்சு.. என் தலைமுடியை வெட்டிட்டாங்க.. எனக்கு சாப்பாடும் போடல.. இதுக்கு மேல விட்டால், நான் செத்து போயிடுவேன்னு பயந்துபோய், என்னை என் கிராமத்துக்கு கூட்டிட்டு வந்து நடுரோட்டில் போட்டுட்டு போய்ட்டாங்க.." என்றார்.

தொடர் சிகிச்சை

தொடர் சிகிச்சை

இதையடுத்து போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அய்யப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இப்போது கலைச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்து வருகிறது.. கலைச்செல்வி குணமாகி வந்தால்தான் அய்யப்பன் பற்றின உண்மை தெரியவரும்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+